பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் தாய்

வணக்கம் ! வணக்கம் ! என்தாயே !
வயிற்றில் சுமந்து பெற்றாயே !
வணக்கம் !! வணக்கம் ! என் தாயே !
வளர்த்தாய் ; ஊட்டி வளர்த்தாயே!

வணக்கம் ! வணக்கம் ! என்தாயே !
வார்த்தை சொல்லிக் கொடுத்தாயே !
வணக்கம் ! வணக்கம் ! என்தாயே !
வாரி அனைத்து மகிழ்ந்தாயே !

வணக்கம் ! வணக்கம் ! என்தாயே !
வாரி முடித்துக் களித்தாயே !
வணக்கம் ! வணக்கம் ! என்தாயே !
பள்ளிக் கனுப்பிச் சிரித்தாயே !

வணக்கம் ! வணக்கம் ! என்தாயே !
மாமன் போலப் படிப்பேனே !
வணக்கம் ! வணக்கம் ! என்தாயே !
உன்னே என்றும் மறவேனே !

55