பக்கம்:இனியவை நாற்பது-மூலமும் உரையும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

பிச்சை எடுத்தாயினும் கல்வி கற்றல் மிகவும் இனியது. நல்ல அவையிலே கற்றவை நினைவுக்கு வந்து கை கொடுப்பது முற்பட மிகவும் இனியது. முத்து போன்ற புன்முறுவல் பல்லினரின் சொல் இனிமையானது. மற்றும், மேலான பெரியவர்களைச் சார்ந்து வாழ்வது உறுதியாக

இனியதாம்.

1

செல்வம் உடையவன் பிறர்க்கு வழங்குதல் இனிது. இல்லற வாழ்க்கை கணவனும் மனைவியும் ஒன்றி நடத் தின் முற்பட இனிது. மனை வாழ்க்கை சிறவாதாயின், வாழ்க்கை நிலையாமை உணர்ந்து கால நீட்டிப்புச் செய் யாதவராய் உடனே துறவு கொள்ளுதல் நன்கு தலை யானதாய் இனிதாம்.

2

ஏவுவதைத் தட்டாத மக்கள் உடைமை முன் இனிது. மாணாக்கன் குற்றம் செய்யானாய் நாடோறும் கல்வி கற்றல் மிக இனிது. சொந்த ஏர் மாடு உடையவனது பயிர்த் தொழில்தான் இனியது. அவ்வாறே ஆராயின், செல்லும் திசைகளில் நல்ல நட்பு கொள்ளல் இனிது.

3

யானைகள் மிக்க படையமைத்தல் முன் இனிது. மற்றோர் உயிரின் உடலைத் தின்று தன் உடலை வளர்க்காதிருத்தல் முன் இனிது. காட்டு வழிவரும் ஆற்றங்கரையில் இருக்கும் ஊர் இனிது. மற்றும், மானமுடைய நல்லோர் தரும் மதிப்பு இனிது.

4

எவ்வுயிரையும் கொல்லாமை இனிது. செங்கோல் முறைதவறி வேண்டியவர்க்கு மட்டும் சிறப்பு செய்யா திருத்தல் இனிது. அரசன் செங்கோலனா யிருத்தல் இனிது. இயன்ற மட்டில் யாரிடத்தும்-யாரைப்பற்றியும் பொல் லாப்பு பேசாமை நன்கு இனிது.

5