பக்கம்:இனியவை நாற்பது-மூலமும் உரையும்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இனியவை நாற்பது
உரையாசிரியர் முன்னுரை

சங்க இலக்கியம்:

சங்க இலக்கியங்களைப் பதினெண் மேற்கணக்கு எனவும் பதினெண் கீழ்க் கணக்கு எனவும் இருவகையாகப் பிரித்துக் கூறுவது மரபு. பதினெண் என்றால் பதினெட்டு: கணக்கு என்றால் நூல் (புத்தகம்). மேல்கணக்கு என்பது: - மிகவும் நீண்ட பெரிய பாடல்களைக் கொண்டுள்ள நூல்கள் மேல் என்னும் அடைமொழி பெற்றன - என்பதாகும். கீழ்க் கணக்கு என்பது: அடி அளவால் குறைந்த - அதாவது- ஐந்தடிகட்கு மேற்படாத சிறிய பாடல்களைக் கொண்ட நூல்கள் கீழ்' என்னும் அடைமொழி பெற்றனஎன்பதாகும். கீழ்' என்பது இங்கே மட்டமான தன்மை என்னும் பொருளில் இல்லை; அளவில் சிறியது என்னும் பொருளில் உள்ளது; மற்றபடி, கருத்தால் சிறந்தனவே யாகும். கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டின் பெயர்களை அறிந்துவிடின் இவ்வுண்மை புலனாகும். அவையாவன:

கீழ்க்கணக்கு நூல்கள்:

திருக்குறள், நாலடியார், பழமொழி, திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக்