பக்கம்:இனியவை நாற்பது-மூலமும் உரையும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

 'மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதன் சேந்தனார், எனக் குறிப்பிடப்பெற்றுள்ளார். அப்பாவைப் போலவே செயல்படுபவனை, அவன் அப்பன் மகன்' என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு. பூதன் சேந்தனார் மதுரைத் தமிழாசிரியர் மகனாம். மதுரைத் தமிழாசிரியர் பெயர்என்ன - தெரியவில்லை. அவர் காலத்தில் மதுரையில் தமிழாசிரியர் என்றால் அவரைத்தான் குறிக்கும் போலும் அந்த அளவுக்குத் தலைமைப் புலமை உடையவராயிருந்திருக்கிறார்; அதனால் அவரது இயற்பெயர் மறைந்துவிட்டது. அத்தகையவரின் மகனாம் நூலாசிரியர் பூதன் சேந்தனார். இது இவரது இயற்பெயர்.

ஆசிரியர், கடவுள் வாழ்த்துப் பாடலில் குறிப்பிட்டுள்ள மூன்று தெய்வங்களுள் சிவனை முதலில் குறிப்பிட்டிருத்தலால் சிவ நெறியினராய் இருக்கலாம்.

இவரது இந்நூலைக் கற்று அதன்படி ஒழுகின் வாழ்க் கையில் நன்மை பெறுதல் உறுதி.

சுந்தர சண்முகன்