பக்கம்:இனிய கதை.pdf/100

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

115

                   155

என்னை அனுமதிக்கவில்லை. நான் கொலைகாரன்! நான் பாவி!

என் கறையை மன்னித்துவிடுவாய் நீ. நான் அறிவேன்!

ஆணுல், என் குற்றத்தை ஆண்டவன் மன்னிக்க மாட்டானே?

இன்று தினம், நீதியின் தீர்ப்பு நாள்! இனி நான் நிம்மதியாகக் கண்களை மூடிவிடுவேன். சுசீலாவிடமிருந்து உனக்கு 'உயில்' கிடைக்கும். உன் அன்பு என் மீது துளியளவாவது எஞ்சி இருக்குமாளுல் அந்தத் துளியைக் கலாவுக்கு உரிமையாக்கு உடைமை யாக்கு இதை நீ செய்வாயல்லவா?

ஆண்டவன் என்னும் நீதிதேவன் பின்னிவரும் விதி என்கிற வலையினுள் இதோ, விழவிருக்கும் சிலந்தி நான்!

உன் தந்தையைக் காண வேண்டுமானுல், எப் போதுமே பூட்டப்பட்டிருக்கும் நம்வீட்டுப் பெட்டகத் தைத் திறந்து பார்!

  என்னை மன்னித்துவிடு, தம்பி!
    இப்படிக்கு, ரமேஷ் தாஸ்!”

"அப்...மா...மா!" என்று அலறித் திரும்பிளுன் சுசீந்தர்,

மறு கணம், "ஐயையோ!" என்று கூக்குரல் பரப்பிளுன் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/100&oldid=1494302" இலிருந்து மீள்விக்கப்பட்டது