பக்கம்:இனிய கதை.pdf/101

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

116 துப்பாக்கி வெடிச் சத்தத்தில் சுசீலாவின் நெற்றிப் பொட்டு அழிந்தது! "ஐயையோ! உங்களுடைய உயிரைக் கட்டிக்காக்க வேண்டுமென்று என்னவெல்லாமோ பிரயத்தனப் பட்டேனே? துப்பாக்கி ரவைகளையும் உங்கள் பார்வைக் குத் தட்டுப்படாமல் நானே பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டேனே? என் முடிவுக்கும் மிஞ்சிவிட்டதே உங்கள் முடிவு? இந்த ஒரு முடிவை ஏற்படுத்திக் கொள்ளத்தான் இந்த இருபதுவருஷ காலமாக நீங்கள் தவம் இருந்தீர்களா?” பச்சைப் பாலகனைப் போல அவன் புரண்டு புலம்பி னன், மண்டையில் அடித்துக்கொண்டு கதறியழுதான்! உதிர்ந்து விழுந்து ஓடிக்கொண்டிருந்த துப்பாக்கித் தோட்டாக்கள், வழிந்து ஓடிக்கொண்டேயிருந்த விழி நீர் வெள்ளத்திலே அழுத்திய 'புனிதம்' அடைந்தன!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/101&oldid=1493526" இலிருந்து மீள்விக்கப்பட்டது