பக்கம்:இனிய கதை.pdf/102

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தங்கத் தாலி 'குறி' போடப்பட்ட அழுக்குத் துணிகள் கும்பல் சேர்ந்திருந்தன. அவற்றை ஓர் ஒரமாகத் தள்ளிவிட்டு உட்கார்ந்தான் கருப்பன். புகையிலை மட்டை'த் துண்டு ஒன்று அவன் வாயில் ஊறியது; எச்சில் ஊறிக்கொண்டிருந்தது. இரு உதடுகளுக்கும் மத்தியில் இடது கைவிரல்கள் இரண்டை வைத்து, அவற்றினுண்டே ஊற் றெடுத்த எச்சில் துளிகளே வாசலுக்கு வேகமாக அனுப் பினுன் அவன். “கொக் கொக் என்று சிணுங்கல் இருமல் புறப்பட்டது. “ஏ, அப்பா! வெளுத்ததுக்கு அல்லாத்துக்கும் பொட்டி போட்டாச்சு; எனக்குப் பதினஞ்சு காசு கொடு; கடைப்பக்கம் போயி இடியாப்பம் சாப்பிட்டுவிட்டு ஒட்ட மாக வரேன். துறைக்குப் போறதுக்கு, அப்பாலேதான் தெம்பு வருமாக்கும்!” பேசியது இள வட்டம்; ஆளுல் சிரித்தது பழுத்த பழம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/102&oldid=1493527" இலிருந்து மீள்விக்கப்பட்டது