பக்கம்:இனிய கதை.pdf/103

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

118

                   118

“நல்ல... பய மவண்டா இவன்!... ஏலே, சொக் கப்பா உள் வீட்டு மாடத்திலே ஒரு சுருக்குப்பை இருக்கு, அதைப் பிரிச்சு நீ கேட்டதை மட்டும் எடுத் துக்கோ, சொச்சம் எனக்குப் பசியாற வேணும்! சொக்கப்பா சொக்கப்பா அடுப்படியிலேயிருந்து ஒரு குவளை நீராகாரம் ஊத்தியாந்து கொடுத்துட்டுப் போ. வெறும் வயித்துக்கு இப்ப அதை ஊத்தி வைச்சால் தான் மூச்சுவிடாமல் கெடக்கும்” என்று சொல்லிக் கொண்டே, குறி போடப்பட்ட துணிமணிகளை ஒவ்வொன்ருகப் பிரித்து உதறலாளுன் கருப்பன். ரத்தம் சுண்டின கைகளில் வலி எடுத்தது.

இன்னும் சரிபாதி மிஞ்சிக் கிடந்தது. மகன் கொண்டுவந்த நீராகாரம் கும்பியை நனைத்துப் பதப் படுத்தியது. சொக்கப்பன் சென்ற வழியே சென்று மீண்டன கருப்பனின் விழிகள். மறுவினுடியில், சன்னமான இனிய குரலொன்று கேட்டது. கடலைக் கொல்லையை அடுத்திருந்த குடிசைக்கு முன்பு நின்ற பெண் அவனது ப்ர்ர்வையில் தட்டுப்பட்டாள். பெயர் பொன்னம்மா. கருப்பன் எண்ணமிட்டான். என்னமோ இந்தக் கட்டையை அலஞ்சிருங் காட்டுச் சுடலையிலே போடறதுக்குள்ளாற, பயலுக்கு இந்தக் குட்டியைக் கட்டிப் போட்டுப்பிட்டா எம்பிட்டோ நிம்மதியாகிப் போகும்!ம்!நூறு, ஐம்பது பணம் எங்கேயிருந்துதான் வந்து கொட்டப் போகுதோ? அந்த அங்காளம்மனுக் குத்தான் தெரியும்!'

எஞ்சியிருந்த அழுக்குத் துணிகளில் அவன். நோக்கு தஞ்சமடைந்தது. சட்டை, வேஷ்டி, ரவிக்கை, புடவை, கோட்டு:இப்படி ஒவ்வொன்றையும் உதறினன் கருப்பன், பொத்தான்கள் மூன்று கிடைத்தன. ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/103&oldid=1494444" இலிருந்து மீள்விக்கப்பட்டது