பக்கம்:இனிய கதை.pdf/104

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

119

                  199

சட்டையில் ஒரு காசு இருந்தது; எல்லாவற்றையும் எடுத்துத் தட்டுப் பலகையில் வைத்தான். கடைசியாகக் கிடந்த புத்தம் புதிய பழுப்பு நிறக் கால்சட்டையை உதறிவிட்டு, சட்டைப் பைகளைப் பிரித்தான்; இரட்டை வடத்தங்கச் சங்கிலியில் இணைக்கப்பட்டிருத்த தங்கத் தாலி ஒன்று தரையில் விழுந்தது! நட்ட மரம்போன்று அப்படியே நின்றுவிட்ட அவன் சுய நினைவு பெற இரண்டு விநாடிகள் தேவைப்பட்டன. கால்சட்டையின் இடுப்புப் பட்டையைப் புரட்டி, குறி என்ன போட்டிருக் கிறது என்று தேடினன். குறியைக் கொண்டுதானே அது யாருக்குச் சொந்தமானது என்பதை அறிந்து கொள்ள முடியும்? குறி ஏதும் காணப்படவில்லை. தரையில் தனித்திருந்த தங்க நகையின் பேரில் ஒற்றைக் கண்ணே நாட்டியவாறு, நரை திரண்டதலைக் குடுமிக் கேசத்தை ஒரு தட்டுத்தட்டி முடிந்தான் அவன். 'குறி போட மறந்துபூடிச்சு போலே! என்று முடிவு செய்து. குறிபோடும்மைச்சீசாவை எடுத்து, மூன்று புள்ளிகள் வைத்துவிட்டு, கால்சராயைத் துணியுடன் துணியாக வீசினன். 'செட்டித்தெருப் பள்ளிக்கூடத்துக்குப் புதிசா மாத்தி வந்திருக்கிற வாத்தியார் ஐயாவோடது இந்தக் கால்சராய்!' மகன் சொன்ன அடையாளம் இது!

கருப்பனின் மனம் அந்தத் திருமங்கல்யத்துடன் பிணைந்து, கடந்த காலப் பனி மூட்டத்தைத் துண்டாடிப் பிளந்து பாய்ந்தபோது, அவனுடைய விழிகளிலிருந்து நீர்த்துளிகள் ஒவ்வோன்ருகச் சிதறித் தெறித்து, விழுந்துகொண்டிருந்தன.

கத்தரிக்காடு என்று அந்த ஊருக்குப் பெயர். குக்கிராமம். அதன் வடக்குக் கோடியில்தான் சலவைத் தொழிலாளர் குடும்பங்கள் இருந்தன. அவற்றில் கருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/104&oldid=1494440" இலிருந்து மீள்விக்கப்பட்டது