பக்கம்:இனிய கதை.pdf/105

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

120

                       120

பனின் குடும்பமும் ஒன்று. அவன், அவனே நம்பி யிருந்த அவனுடைய நித்திய வியாதிக் காரியான மனைவி ராக்காயி, அவன் மகன் சொக்கப்பன் ஆகிய மூவருக்கும் தலைமுறை தத்துவமாகக் கைக்கொண்டிருந்த வெளுப்பு வேலை படியளக்கவில்லை. ஆகவே, அவன் திக்குமுக் காடிப் போனன்

கிடைத்து வந்த வரும்படி வாய்க்கும் கைக்குமே பற்றும் பற்ருததாக இருந்தது.

இப்படியிருக்கும்பொழுதுதான் ஒரு நாள் அடம் பிடிக்கும் பணக்காரக் குழந்தையைப்போல் மழை நின்று நின்று பெய்தது. பின்னங்கால்கள் இரண்டும் கட்டப் பட்டு வாசலில் நின்ற கழுதையைப் பிடித்து வந்து வாசல் தாழ்வாரத்தில் கட்டுவதற்குள் வியாதிக்காரி யான ராக்காயிக்கு மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. மழையில் வேறு நனைந்து விட்டாள். அதைச் சாக்காகக் கொண்டு குளிர்க் காய்ச்சல் வந்துவிட்டது அவளுக்கு. வெளுப்பதற்கு வந்திருந்த புடவைகள் அத்தனையையும் அவள் மேல் போர்த்தியுங்கூட, அவள் உடம்பு நடுங்கிக் கொண்டேயிருந்தது. இக் காட்சியைக் கண்டதும், கருப்பன் பதறித் துடித்தான். ஒடிப்போய் உண்டியற் கலயத்தைக் கையில் எடுத்துச் சில்லறைக் காசுகளைச் சேர்த்தான் அரை ரூபாய் சேர்ந்திருந்தது. எடுத்து முடிந்துகொண்டு, நாட்டு வைத்தியர் வீட்டுக்கு ஒட்ட மாக ஒடினன்.

வந்த வைத்தியர் நாடிப் பரிசோதனை செய்தார். இது கபவாத ஜுரம். செட்டித் தெருவிலே இருக்கும் புது டாக்டர் ஐயாவைக் கூட்டியாந்து பாரு, கருப்பா! ஆனல் அவர் ரொம்பக் கருர் ஆசாமியாம். பத்து அஞ்சு பணத்தைக் கொடுத்துக் கையோடு அழைத்து வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/105&oldid=1494400" இலிருந்து மீள்விக்கப்பட்டது