பக்கம்:இனிய கதை.pdf/106

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

121 காட்டு. மூன்று நாலு ஊசி ஏற்றினுல் எல்லாம் வசத் துக்கு வந்துவிடும்' என்றர் நாட்டு வைத்தியர்.

மண்ணுல் செய்யப்பட்ட ஐயனுர் போல் கருப்பன் மருண்டுபோய் நின்று விட்டான். ராக்காயிக்குச் சீக்கு ரொம்ப மிதமிஞ்சிப் போச்சுப்போலே. இல்லாட்டி, தனக்கு வருகிற வரும்படியை விட்டுப் போட்டு, டாக்டர் ஐயாவை எதற்குக் கைகாட்டிப் போகணும்?...டாக்டர் பணத்திலே குறிகாரர்னு முந்தாநாள் கூட யாரோ பேசிக்கிட்டாங்க. அவருக்குப் பத்து அஞ்சு கொடுக்கிற துக்கு இப்ப நான் எங்கே போவேன்?" என்று நெஞ்சம் நெக்குருகினுன் கருப்பன்.

தெரிந்த 'எசமானர்களிடம் பல்லைக் காட்டி, வழி மறித்திருக்கும் தலைவி திரை எடுத்துக்காட்டி, பணம் கடன் கேட்டான். தவனே வைத்து வட்டிக் காசையும், தந்திடறேனுங்க, காசு பணம் ஏதும் வாங்காமல் உங்கள் துணிமணிகளை யெல்லாம் சலவை செஞ்சு தாரேனுங்க!' என்று என்னவெல்லாமோ சொல்லிப்பார்த்தான். எந்தக் கணையும் அவனுக்கு நல்ல பதில் கூறவில்லை. கடைசியில் ஏமாற்றமே உயிராகக் குடிசையின் உள் வீட்டறைக்கு நடந்தான். கள்ளிப்பெட்டியைத் துழாவினன்; செப்புத் திருகாணி கூடக் கைக்குள் சிக்கக் காணுேம். மிளகாய்ப் பானைக் குள் கையை நுழைத்தெடுத்தான். ஏதோ ஒரு பொருள் பார்த்தான். திடுக்கிட்டான். தாலி! தங்கத் தாலி! ராக்காயின் கழுத்தில் இருபத்தொன்பது வருஷங் களுக்கு முன் பூட்டிய மங்கலச்சின்னம் அது. நினைவுகள் தறிகெட்டுச் சுற்றின; அவன் பம்பரமாகச் சுழன் ருன். மூன்ரும் மாசம் ராக்காயி குளித்துக்கொண்டிருக்கையில் தங்கத்தாலியின் பின்பக்க இனப்பில் பிளவு கண்டிருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/106&oldid=1494460" இலிருந்து மீள்விக்கப்பட்டது