பக்கம்:இனிய கதை.pdf/107

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

122 பதை உணர்ந்தாள்; மஞ்சள் ஒன்றை வீட்டுக்கு வந்து எடுத்துக் குலதெய்வத்தை நேர்ந்துகொண்டு மஞ்சள் தடவின கயிற்றில் முடிந்து கழுத்தில் அணிந்து கொண்டாள். ஆசாரியிடம் பத்தவைச்சுத் தந்திடு றேன்!” என்று மனைவியிடம் அளித்த உறுதியைச் செயற்படுத்துவதற்கு அவனுக்கு ஒய்வு இடங்கொடுத் தால் தானே?

ராக்காயியின் உயிரையும் தன் உள்ளத்தையும் அடைத்து வைத்திருந்த அந்தத் தாலியையே இமை மூடாமல் பார்த்தவாறு இருந்த கருப்பனுக்கு ஏதேதோ பயங்கரமான எண்ணங்கள் படமெடுக்கும் பாம்புகளாக உருமாறிச் சீறத் தொடங்கின.

"அய்ய...ஆத்தா...சாமி!"

உயிர்ப் பாகத்தில் இவ் வாரத்தைகள் எதிரொலித் தன. ஒரு கணம் சிந்தித்தான்; அவன் கைகள் கூம்பின; கண்ணிரை வழித்தெறிந்துவிட்டு, கைக்குள் அடங்கி யிருந்த தாலியுடன் டாக்டரை நாடிப் பறந்தான், செட்டித் தெருவில் கும்மிருட்டு அப்பிக் கிடந்தது. கீழத் தெருவிலிருந்து ஊளையிட்ட நாயின் அவல ஒலம் அவனை அச்சுறுத்தியது. கைக்கழியைக் கீழே போட்டு விட்டு, "டாக்டர் ஐயா!" என்று குரல் கொடுத்தான்.

தூக்கம் கலைக்கப்பட்ட டாக்டருடன், தூண்டிவிடப் பட்ட கோபமும் வந்தது. மென்று விழுங்கிக்கொண்டே விஷயத்தை வெளி யிட்ட ஏழை, அவர் வாய் திறந்து பணத்தைப் பற்றிக் கேட்பதற்கு முன்பாகவே தான் கொணர்ந்த தாலியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/107&oldid=1494462" இலிருந்து மீள்விக்கப்பட்டது