பக்கம்:இனிய கதை.pdf/108

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

123

                  123

அவர் காலடியில் வைத்து விம்மியவாறே, இதை நம்பிக்கைக்கு வைச்சுக்கிடுங்க, எசமான்! அடுத்த கிழமை பீ.சுப் பணம் பூராத்தையும் கட்டிப்பிட்டு, இதை மீட்டுக்கிட்டுப் போகிறேன். இது என்னுடைய சம்சாரத்தினுடையது. அந்தப் பொம்பளைக்குத்தான் இப்ப சீக்கு அதிகமாயிருக்கு. நீங்கதான் எனக்குத் தெய்வம் கணக்கிலே! அட்டி சொல்லாமல் வந்து பாருங்க!" என்ரறன்.

டாக்டர் நாகசுந்தரத்தின் வீட்டுப் பெட்டியில் அந்தத் தாலி அடங்கியது.

"சரி வண்டி கொண்டு வரலேயா?”

  "இல்லீங்க!"

"இப்போ காட்டி லேயும் மேட்டிலேயும் அந்தக் கும்மிருட்டிலே எப்படி நான் நடந்து வர்றது?" என்று கேட்டார் டாக்டர்.

"இருங்க, இந்தா கொண்டு வாரேன்!” என்று திரும்பிய கறுப்பன் மொட்டை வண்டியுடன் வந்து டாக்டரை ஏற்றிச் சென்றன்.

மூன்று நாட்கள் ராக்காயிக்குச் சுயநினைவு திரும்ப வில்லை. ஊசி மருந்து டப்பாக்கள் செலவழிந்தன; மருந்துக் கலவைகள் உடலுக்குள் முடங்கின. ஆனல் நான்காவது நாள் டாக்டரை அழைத்துவர இரவல் மாட்டு வண்டியைத் தேடிச் செல்லவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

ஏறு முகத்தில் இருந்தான் செஞ்சுடர்ச் செல்வன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/108&oldid=1494456" இலிருந்து மீள்விக்கப்பட்டது