பக்கம்:இனிய கதை.pdf/109

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

124

                       124

இரட்டைவடச் சங்கிலி அறிமுகப்படுத்திக்கொண் டிருந்த தங்கத்தாவி கருப்பனின் உள்ளங்கையில் நெல்லிக்கனியாகக் காட்சியளித்தது. அதிகமானுக்குக் கிடைத்த நெல்லிக்கனி ஒளவைப் பிராட்டிக்கு உதவ முனைந்தாற்போல, ஒருவேளை, இந்தத் தாலி இவனுக்கு கை கொடுக்கப் போகிறதோ அவரைக் கருப்பன் பார்த்தது இல்லையே?... சொக்கப்பனல்லவா அவரிட மிருந்து 'அழுக்கு எடுத்துவந்தான்...?

மூன்று மாதங்களுக்கு முந்தைய நிகழ்ச்சிக்குள் ஞாபகத்தை பதித்துவிட்டான் அவன். ராக்காயியின் நினைப்புக்கு அவள் தாலியாச்சும் இந்தக் குடிசையிலே இருந்தால் மனசுக்கு எம்பிட்டோ ஆறுதலாயிருக்குமே! அதற்குக்கூட வழிவைக்காமல், அந்தஈவில்லாத டாக்டர் மாற்றலாகிப் போகும்பொழுது, சொல்லாமல் கொள் ளாமல் தன்ளுேடேயே ராக்காயியின் தாலியையும் எடுத்துக்கிட்டுப் போய்விட்டாரே...!' என்ற எண்ணங் கள் தலையெடுத்தன. அவன் பற்களைக் கடித்துக் கொண்டான்.

இப்போது கருப்பனின் மனத்தில் புதிதாக ஓர் ஆலோசனை பளிச்சிட்டது. அந்த ஆலோசனையின் பிற்புலத்திலே பொன்னம்மாவும் சொக்கப்பனும் ஆல வட்டம் சுற்றினர். இந்தத் தாலியையும் சங்கிலியையும் ஒளிச்சுவச்சு, புதுக்கோட்டைப் பக்கம் நாடிப்போய் விற்றுப் பணமாக்கிகுல், எப்படியும் நூறு, இருநூறு ரூபாய் தேறும். காதும் காதும் வைச்சாப்பிலே, பொன்னம்மாவுக்கும் சொக்கப்பனுக்கும் கண்ணுலம் கட்டிப்பிட வேண்டியதுதான்!... டாக்டர் எனக்கு உண்டாக்கின நஷ்டத்துக்கு ஈடு கட்டத்தான் சாமி இந்தத் தங்க நகையை என் கண் முன்னுல் காட்டியிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/109&oldid=1494452" இலிருந்து மீள்விக்கப்பட்டது