பக்கம்:இனிய கதை.pdf/110

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

125 குது போல! ஆமாம், அப்படித்தான் இருக்கும்!' என்று முடிவு செய்தான் அவன்.

ராஜேந்திரபுரத்துப் பாலத்தடியிலிருந்து திரும்பிய கருப்பன் உலர்ந்த துனி மூட்டையை இறக்கிக் கீழே தள்ளிவிட்டது தான் தாமதம் கழுதை பிடித்தது ஒட்டம் சொக்கப்பன் ஓடிவந்து மூட்டையைக் குடிசைக்குள் தூக்கிச் சென்ரறன்.

"அப்பா வாங்க முதல்லே சோறு சாப்பிடலாம். அப்பாலே மற்ற வேலையைப் பாருங்க!' என்ரறன் மகன்.

     "நீ ஆக்கினியா...__?

"இல்லை. வந்து... நம்ப பொன்னம்மா சமைச்சுத் தந்துச்சு...?"

"அப்படியா?...... இரு, மூஞ்சியைக் களுவிக்கிட்டு வாரேன்! ..."

காலையில் அவன் முடிவு கட்டுயிருந்த தீர்மானம் மீண்டும் நினைவில் எழுந்தது. இனிமேல் சாப்பாடு தயார் பண்ணுகிற சோலி விட்டுச்சு சொக்கப்பனும் சுறுசுறுப்பாக வேலை வெட்டியைக் கவனிச்சுக்குவான். என்னமோ மருமகப் பொன் னு பொன்னம்மா வீடு மிதிக்கிற வேலை கூடிவர வேணும்.

சாப்பாட்டு ஏப்பம் ஒய்வு கண்டவுடன், ... தம்பி, இத்தனை நாளைக்கப்பறம் இன்றைக்குத்தான் வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டேன்; இனிமேல் இதுமாதிரியே சாப்பிடலாம் நீயும் நானும், வருகிற மா சத்திலிருந்து ...பொறக்கற மாசம் ஒனக்குக் கண்ணுலமாக்கும்...... ஆமாம்; பொண்னு பொன்னம்மாவே தான்!... என்று விளக்கம் தந்தான் கருப்பன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/110&oldid=1494450" இலிருந்து மீள்விக்கப்பட்டது