பக்கம்:இனிய கதை.pdf/111

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

126

                      126

புதுக்கோட்டைக்குப் புறப்பட எண்ணினன் கருப்பன், ஏழு நாழிகைப் பொழுது இருக்கும்போதே எழுந்துவிட வேண்டும் என்பது அவன் திட்டம். கட்டுச்சோறு தயாரானது. சிம்ணி விளக்கை எடுத்துக்கொண்டு சென்று மிளகாய்ப் பானைக்குள் கையை விட்டான். தேடிவந்த தங்கத் தாலியையும் எடுக்க வேண்டாமா? மறுவினுடி, தேள் கொட்டினு ற் போலத் துடித்துப்போ னன் . தேள் அதனுள் இருந்தால்தானே? பாவம். அவன் பத்திரப் படுத்திவைத்திருந்த தாலியும் சங்கிலியும் அங்கே இருக்க வேண்டாமோ?... எங்கே மறைந் ததோ?

சொக்கப்பன் குறட்டை ஒலி பரப்பிக் கண் வளர்ந்து கொண்டிருந்தான்.

...ஏலே, சொக்கப்பா! மிளகாய்ப் பானையிலே போட்டிருந்த தங்கத் தாலியும் சங்கிலியும் காணுமல் போயிருக்கே? நீ எடுத்தியாடா?"

கண்களைத் துடைத்தபடி ஒருமுறை தந்தையை ஏற இறங்கப் பார்த்தான் மகன்.

"ஆமாம், நான் தான் எடுத்தேன். புதுசா மாத்தி வந்திருக்கிற வாத்தியார் ஐயா வீட்டுது அது. உடை மைக் காரங்ககிட்டே மத்தியானம் சேர்த்துப்புட்டேன்! ...நம்ப பொருளே நமக்குத் தங்கவில்லை! . அயலவங்க சொத்து தங்குமா? இல்லை, நம்ப அதுக்கு ஆசைப் படறதுதான் நியாயமா? "

அந்தஅடி நெற்றிப்பொட்டில் மாத்திரம் விழவில்லை உள்ளத்தில் விழுந்தது. ஆகவே, கருப்பனின் கிழடு தட்டிய உடல் துடித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/111&oldid=1494449" இலிருந்து மீள்விக்கப்பட்டது