பக்கம்:இனிய கதை.pdf/112

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

127


'அப்பா!...”

"சொக்கப்பா! அந்த நகையைப் பற்றி உங்கிட்டே கேட்டு, அதை உடையவங்ககிட்டே சேர்ப்பிக்கத்தான் விசாரிச்சேன்!” என்ருன் கருப்பன். அவனுடைய மனச் சாட்சி சிரித்த சிரிப்பிலே, அவன் தன்னை மறந்ததோடு சற்றுமுன் மனச்சாட்சி தந்த வேதனையையும் மறக்க முயன்ரறன்!

விடிந்தது.

கருப்பனின் விழிகள் சிவந்திருந்தன.

"அப்பா ராத்திரிமுச்சூடும் தூங்கலையா?”

"ஏன், துரங்கினேனே?”

"ம்!... பொன்னம்மா கொஞ்ச நேர முந்திவந்து அஞ்சு ரூபாய் கொடுத்துட்டுப்போச்சு!”

"ஏன்?"

"நீங்க புதுக்கோட்டைக்குப் போகணுமின்னிங்களே? அதுக்குக் கைச் செலவுக்கு!"

"பொன்னம்மா என்றதும், முன்பு கட்டிய கோட்டை தகர்ந்த சம்பவத்தை நினைத்தான் கருப்பன். ‘இனி என் மவனுக்கு எப்படிக் கண்ணுலம் கட்டிவைக்கப் போறேன்?'

"கண்கள் கலங்கின: சொக்கப்பா! நான் புதுக் கோட்டைக்குப் போகலை!" என்ருறன்.

அப்பொழுது __

"இந்தாங்கப்பா!' என்று சொல்லி ஏதோ ஒன்றை நீட்னுன் மகன், தந்தையிடம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/112&oldid=1494397" இலிருந்து மீள்விக்கப்பட்டது