பக்கம்:இனிய கதை.pdf/113

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

128

                   124

கருப்பனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. இரட்டை வடச்சங்கிலியில் பிணைக்கப்பட்ட அந்தத் திருமங்கல்யம் பளபளத்தது!

"ஏது தம்பி இது?”

"புது வாத்தியாரு தந்தாரு? பழைய டாக்டர் ஐயா இந்த வாத்தியார் ஐயவோட ஊர்தாளும். கொடுத் தனுப்பி யிருக்காங்க!”

"நம்முடையது இல்லையே இது? நான் முந்திக் கொடுத்தது வெறும் தாலிப் பெர்ட்டு மட்டுந்தானே?"

"அப்பா என்னை மன்னிச்சிடுங்க. முதலிலே நான் சொன்னது பொய். இருங்க டாக்டர் ஐயா கொடுத்து அனுப்பியிருக்கிற கடுதாசியைப் படிச்சுக் காட்டு கிறேன்!”

சொக்கப்பன் படிக்கத் தொடங்கினன்: "ஏகாலி கருப்பனுக்கு,

டாக்டர் நாகசுந்தரம் எழுதியது.

முதலில் நீ என்னை மன்னித்துக்கொள். என் இதயத்தை எங்கோ அடகுவைத்துவிட்டு, உன்னுடைய மனைவியின் தாலியை அடகாக ஏற்று, நான் உன் பெண்சாதிக்கு வைத்தியம் பார்க்க வந்து அரைகுறை யாக விட்டுச் சென்ற அந்தக் குற்றம் என்னைப் பல நாட்களாக வாட்டியது. அங்கிருந்து மாற்றலாகி வந்ததும், என் மனைவிக்குத் திடுதிப்பென்று விஷக் காய்ச்சல் வந்தது. அவளுடைய கழுத்தில் நான் கட்டிய தாலி என்னை நோக்கி எக்காளமிட்டுச் சிரித்தது. நான் உன்னிடம் இதயமின்றி நடந்த தவறுதலுக்கு எங்கே தெய்வம் என் தாலியை என் மனைவிக்கு நான் பூட்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/113&oldid=1494391" இலிருந்து மீள்விக்கப்பட்டது