பக்கம்:இனிய கதை.pdf/114

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

129

                 129

மாங்கல்யத்தை என்னிடமே சேர்ப்பித்து என் அன்பு மனையாட்டியைப் பிரித்து விடுமோ என்று அஞ்சி அழுதேன். அப்போதுதான் என் குற்றத்தையும் உணரலானேன். என் மனைவி பிழைத்து எழவேண்டு மென்றும், உடனேயே உன்னிடம் காட்டியஈவிரக்கமற்ற தன்மைக்குப் பரிகாரம் செய்வதாகவும் ஆண்டவனிடம் பிரார்த்தித்தேன். என் மனைவி பிழைத்தாள்! அன்றைக்கு என்னிடம் நீ தந்த தாலியைக் கொண்டே அதைக் கொஞ்சம் அழகுபடச் செய்திருக்கிறேன்; தாலியுடன் இனத்திருக்கிற இரட்டைவடச் சங்கிலிதன் என்னுடைய பரிகாரப் பொருள்! உன் மனைவி குண மடைந்திருப்பாளென்று நம்புகிறேன். அடுத்தவாரம் உன் பெயருக்கு ஐம்பது ரூபாய் பணமும் அனுப்பி வைக்கிறேன்

கருப்பன் கண்ணிர் பெருக்கின்ை; மானசீகமாகத் தோன்றிய டாக்டரைக் கைதொழுதான். அவன் வாய், "ராக்காயி! ராக்காயி' என்று புலம்பியது.

         "அப்பா!

"ஒண்ணுமில்லே சொக்கப்பா! பொன்னம்மா கிட்டே சொல்லி அதோட அப்பனை வரச் சொல்லு" என்றன் கருப்பன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/114&oldid=1494321" இலிருந்து மீள்விக்கப்பட்டது