பக்கம்:இனிய கதை.pdf/115

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 மொய்ப் பணம்

"பூரணி!” "என்று"கூப்பிட்டுக் கொண்டு வந்த மாணிக்கம், தோள்மீது கிடந்த ஏர்க்கலப்பையைக் கீழே இறக்கி கைப்பிடிப்பிலிருந்த செவலைக் காளைகள் இரண்டையும் தொழுவத்தில் கட்டினன். வேலை யெல்லாம் முடிந்தமாதிரி ஒரு வகை நிம்மதி கனிந்த மனசுடன், தொட்டியில் கழுநீர் ஊற்றி, அத்துடன் புண்ணுக்கையும் போட்டு' பிறகு மாடுகளுக்குத் தண்ணிர் காட்டினன்.

"மச்சான், கை காலை அலம்பிக்கிட்டு வாங்க சுடு கஞ்சி குடிக்க அப்பாலே அது ஆறிப்போயிடப் போவுது பச்சைத் தண்ணியாட்டம்...... " என்று அழைத்தாள் கொண்டவள்.

ஏலே பூரணி, பார்த்தியா மறந்துப்பிட்டேன். அடுத்தவாரம் ஆடிப் பதினெட்டில்லையா, அதுக்கு என் தங்கச்சி பூவம்மாவையும் அது புருசன் செல்லையாவை யும் பதினெட்டாம்பெருக்குக்கு நம்ப வீட்டுக்கு அழைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/115&oldid=1494313" இலிருந்து மீள்விக்கப்பட்டது