பக்கம்:இனிய கதை.pdf/118

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

133

                        138

குன்னு யோசிச்சுக்கிட்டிருக்கிறதப்போ தான் எனக்கு துப்பு துலங்குச்சு, மச்சான் சோடா கம்பெனியில் பார்க் கிற வேலையையும் வுட்டுப்பிட்டு ஊர்க் கோடி அரசமரத் தடியிலே சீட்டுப் போடு.தாமிங்கிற ரகசியத்தையும் ஒருத்தி மூலம் அறிஞ்சேன். நேத்திக்குப் பொழுது சாய்ந்ததும் வந்து "பூவம்மா, அவசரமா பணம் கொஞ்சம் தேவைப்படுகிறது. உன் கழுத்துச் சங்கிலியைக் கொஞ்சம் கொடு. அடகு வச்சுப் பணம் வாங்கிக் கிறேன், மறுபடியும் சங்கிலியைப் பிறக்கிற மாசத்துக் குள்ளாற மீட்டுப்பிடறேன்” என்று தாஜாப் பண்ணுச்சு. நான் மாட்டேன்னேன், அவ்வளவுதான்!” என்று விக்கலுக்கும் விம்மலுக்கும் மத்தியில் ஒருவாறு தன் கதை'யைக் கூறி நிறுத்தினுள் பூவம்மா.

"பூவம்மா, கண்கலங்காதே. இந்த மாணிக்கமும் என் காணி நிலமும் இருக்கிற மட்டும் உனக்குக் கவலையே வேண்டாம். இங்கேயே இருந்துடு. அந்தப் பயல் செல்லையா வந்து உன்னைத் திரும்ப அழைச்சுக் கிட்டுப் போக வந்தாலொழிய நீ உன் மச்சானைப்பத்திக் கணுவிலே கூட எண்ணுதே" என்று வாய்விட்டு உறுமினன் மாணிக்கம்.

பூவம்மா வாய் திறவாமல் ஏனே அப்படியே ஸ்தம் பித்து நின்றள்.

மாங்குடியிலிருந்து அழகான கூட்டு வண்டி ஒன்று 'ஜல் ஜல்' என்று சதங்கைப் பண்பாட பூவத்தகுடு ராக் காச்சி கோவில் பொட்டலே அடைந்தது. பொட்டல் அப்பொழுது மக்கள் திரளில் கலகலத்தது. ராக்காச்சி அம்மன் கோவிலுக்கு முன் கூட்டு வண்டி நின்றது; அதிலிருந்து மாணிக்கம், அவள் மனைவி பூரணி, அவன் சகோதரி பூவம்மா மூவரும் இறங்கினர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/118&oldid=1494466" இலிருந்து மீள்விக்கப்பட்டது