பக்கம்:இனிய கதை.pdf/119

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

134

                  ‌134

இளஞ் சூரியன் இளமை மாறிக் கொண்டிருந்தான். அம்மனைத் தரிசித்தார்கள். அர்ச்சனையும் நடந்தது. கட்டுச் 'சோற்றை' 'மூவருமாக ஒரு கை, பார்த்தார்கள். 'உன் மச்சானும் இந்தத் திருநாளைக்கு தம்பளோடே இருந்திருந்தா எம்மாம் சந்தோசமா இருக்கும், பூவம்மா என்றள் பூரணி. பூவம்மாவும் அதைப் பற்றித்தானே நினைத்து மனம் புழுங்கிக் கொண்டிருந்தாள் எந்நேரம் பார்த்தாலும்!

வான திர வெடித்த ஜனங்களின் ஆரவாரக் கூச்சல் கேட்டது. பூவம்மா திரும்பினுள். எதிரே பார்த்தாள். கொஞ்ச தூரத்தில் கூட்டம் நெரிசல் பட்டது. அங்கு சிலம்பம் விளையாட்டுப்போட்டி நடந்துகொண்டிருந்தது.

பூவம்மா அங்கு நடந்து கொண்டிருக்கும் சிலம்ப ஆட்டத்தில் நாட்டம் காட்டவில்லை. அவள் நினைவு முன்பு என்றைக்கோ நடந்த சிலம்ப விளையாட்டில் கட்டுண்டிருந்தது. ஆம்; அதுதான் அவளே அவள் மச்சான் செல்லையாவிடம் பிணைத்துவிட்ட சம்பவங்கூட!

இதே போல, திருவிழாவில்தான் அன்றைக்கு மாணிக்கமும் செல்லேயாவும் சந்தித்தார்கள், கைகளில் தாங்கிய நீண்ட மூங்கில் கழிகளுடன், அங்கு பூவம் மாவும் இருந்தாள். காளைகள் இருவருக்கும் பந்தயம் முளைத்தது. ஆட்டம் துவங்கியது. செல்லையாவுக்கு ஏற்கனவே பூவம்மாவைத் தெரியும். அவனுக்கு அவள் பேரில் க ச த ல் கண் உண்டு. அவர்களிருவருக்குள் நடந்த போட்டிப் பந்தயம் தன் காதலை நிர்ணயிக்கும் ஒரு பரீட்சையாக வாய்க்கு மென்ற உண்மையை அப் பொழுது செல்லையா அறியவே இல்லை, சிலம்பம் முழங் கியது. இருஜோடிக் கம்புகளும் சந்தித்தன; பிரிந்தன; பின் கூடின. கூட்டத்தில் கைதட்டல் கடைசியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/119&oldid=1494467" இலிருந்து மீள்விக்கப்பட்டது