பக்கம்:இனிய கதை.pdf/12

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

13

                ‌‌13

"எல்லார்க்கும் உண்டு இலையும் பழுப்பும்"!_ பழமொழி இது. செல்லாயி பழுத்த இலை, பசுமை

நரம் போடிய பழைய நாட்களே அவள் எண்ணிப்   பெருமூச் செறியும் நிலையில் அவள் இல்லை.  சுய நினைவு கிடையாது; கணப்புக் குழியின்  தலைமாட்டில் படுத்துக்கிடப்பது போன்ற பிரமை  ஒருசமயம்; மறுகணம் சாரலில் அகப்பட்டுக் 

கொண்ட மாதிரி ஒரு நடுக்கம். தெற்றியும் நெஞ் சும் கூத்துமேடை ஆயின. அவள் கைபிடித்த மன வாளனும் ஈன்றெடுத்த தன:னும் தோன்ருமல் இருந் தனர். உள்ளத் திடை சூழ்ந்த இருள் குடலையும் கப்பியது. பொக்கை வாய் ஒரங்களில் கண்ணிர் அணைந்தது. அவளை யும் மறந்த

நிலையில் அவளுள்ளே ஏதேதோ கனவுகளும் 

காட்சிகளும் சோபனம் கொட்டின, உடலைத் தீண்டிய உணர்வு ஏற்பட்டதும், அவள் விழிமலர்ந் தாள்; அகல் விளக்கு எரிந்து கொண்டிருப் பதைக் கண்டாள். "நான்தான் முருகன், செல்லாயி அக்கா"! என்ற குரல் கேட்டது. வயது சென்றவன் ஒருவன் உட்கார்ந் திருந்தான். அவள் நிலை உணர்ந்து 'சுக்குத் தண்ணி' வைத்துக் கொணர்ந்திருந்தான் அவன்; பக்கத்துத் தோட்டம்தான் அவனுக்கு அரண்மனை, 'நல்ல மனம்' தான். அவனுடைய சொத்து போதாத 'ஒரு மெடறுகுடிச்சுப்பிடு, அக்கா! "யாதொண்ணும் எனக்கு வோணும்!.. நானு இனி யாருக்காக உசிரோடே வாழனும்?... இம்பிட்டுக் காலமா நானு ஏதுக்கு பூமிக்குப் பாரமா இருந்தேன்னு எனக்கு மட்டும் படலை!..."

முருகனின் கைப் பிடியிலிருந்த லோட்டா நடுங்கிக் 
கொண்டிருந்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/12&oldid=1491250" இலிருந்து மீள்விக்கப்பட்டது