பக்கம்:இனிய கதை.pdf/120

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

135

                 135

வெற்றிக்கு முடிவு கூறியது. மாணிக்கம் வெற்றி பெற்றன் வெற்றி பெற்றவன், தோற்ற செல்லையா வைத் தோளில் அலாக்காகத் துரக்கி வைத்துக்கொண்டு கூத்தாடினன்.

"செல்லையா மச்சான் நான் இன்னிக்கு கெலிச்சதே உன் குலேதான். என் தங்கக்சி உன்னையே விழுங் கிடருப்பிலே பார்க்கப் போக, நீயும் பொம்பளைக் குட்டிக்கு இந்த ஆண்பிள்ளை சளைக்கலாமாங்கிற பவி சிலே அதையே வச்ச கண் எடுக்காமப் பார்க்கப் போய்த் தானே ஐயா செயிச்சாரு! நியாயமாப் பார்த்தாக்க நான் உனக்கும் தங்கச்சி பூவம்மாவுக்கும் ரொம்பவும் கடமைப் பட்டவன், இல்லையா மச்சான்...... " என்று வெகு நாள் தோளோடு தோள் பழகியவன் போலப் பேசித் 'தமாஷ்' பண்ணினுன் மாணிக்கம் பூவம்மாவும் செல்லேயாவு ம் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

அன்றைக்குச் சந்தித்த பூவம்மா-செல்லையா இரு வரையும் திரும்பவும் மணவறையில் கொட்டுமேளம் முளங்கக் கோலாகலமாகச் சந்திக்கச் செய்த பெருமை மாணிக்கத்தைத்தான் முழுக்க முழுக்கச் சேர்ந்தது. அழகும் அழகும் சேர்ந்தது; இதயமும் இதயமும் சேர்ந்தது.

"தங்கச்சி!” என்று குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தான் மாணிக்கம், தலைமீது வைத் திருந்த மூட்டையைக் கீழேவைத்து அதைப் பிரித்தான். அதற்குள் அவன் மனைவி பூரணி அங்கு தோன்றி அவ னுக்கு ஒத்தாசை பண்ணினுள்.

"தங்கக்சி.........!" என்று அழைக்கத் துவங்கிய மாணிக்கம் மறு கணம் என்னவோ நினைத்துக்கொண்ட வன் மாதிரி சலனமற்று அப்படியே நின்ரறன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/120&oldid=1494468" இலிருந்து மீள்விக்கப்பட்டது