பக்கம்:இனிய கதை.pdf/121

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

136

                        136

"பூவம்மா ஒனக்குச் சேதி தெரியுமா? உன் புருசன் காலம்பெற சந்தையிலே கண்டு உன்னை அங்கே கூட்டி வந்து விடுறியா இல்லையான் னு சவடால் பண்ணிஞன், அவன் திமிருப் பேச்சுக்கு இந்த மாணிக்கமா மசிஞ்சு கொடுப்பான் ஆத்திரம் கொண்ட மட்டும் பேசித் தீர்த்தேன். அவனும் பேசினன். கடைசியாக எங்களுக்குள்ளே பேச்சு முத்திக் கைகலப்பு ஏற்பட்டுச்சு செல்லையாப் பயலுக்குச் செம்மையான அடி. மூச்சுப் பேச்சில்லை. பாவம், யாரோ அவனுக்குத் தெரிஞ்சவங்க வண்டியிலே வச்சு ஜில்லாப் போர்டு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிப் போயிருக்காங்க. உன் மச்சானுக்கு இப்ப வாவது புத்தி வந்திருக்கும், என்ன தங்கச்சி, உன்னை அன்னிக்கு அவன் கைநீட்டி அடிச்சு வீட்டை விட்டுத் துரத்தினதுக்கு, இப்போ அவனுக்கு நல்ல பாடம் வந்திருக்கும், ஊம்......" என்று சொல்லி வீருப்புடன் அட்டகாசச் சிரிப்பொன்று சிரித்தான் மாணிக்கம்.

"ஐயோ!" என்று அலறியவாறு அடிசாய்ந்த மரமாக மூர்ச்சித்து விழுந்தாள் பூவம்மா.

"தங்கச்சி!” என்று ஓடிய மாணிக்கம் அவளைத் தாங்கிக் கொண்டான் கைபிடிப்பாக, கட்டிலில் அவளைப் படுக்க வைத்தான். மூடிய கண்கள் முடியவாறிருந்தன; அவளுக்குப் பேச்சு மூச்சில்லை; நினைவு திரும்பவில்லை.

மாணிக்கத்துக்குக் கண்களில் கண்ணிர் முட்டி நின்றது. "பூரணி, தங்கச்சியை ஜாக்கிரதையாப் பார்த் துக்க. நொடியிலே ஓடிபோய் வைத்தியரைக் கையோடே கூட்டியாந்திடுறேன்" என்று சொல்லி விட்டு, ஒட்டமும் நடையுமாகக் கிளம்பினன் மாணிக்கம்.

“பூவம்மா! பூவம்மா!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/121&oldid=1494474" இலிருந்து மீள்விக்கப்பட்டது