பக்கம்:இனிய கதை.pdf/122

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

137

                       137

பூசணி அழகான அவள் முகத்தை வருடிக்கொண்டே மெல்ல அழைத்தாள்.

"அண்ணி!" என்று அழைத்துக் கொண்டே மெல்ல படுக்கையில்எழுந்து உட்கார்ந்தாள் பூவம்மா. "அண்ணி அண்ணுச்சி எங்கே காணுேம்" என்று மறுபடியும் வினவினுள். பூரணி விவரத்தைச் சொன்னுள்.

"அண்ணி, என்க்கு நீங்க ஒரு உதவி செய்வீங்களா? என்ன இருந்தாலும், என்னதான் என்னே அநியாயமா அடிச்சு வீட்டை விட்டுத்தான் துரத்திப்பிட்டாலுங்கூட என் மச்சான் என் புருஷன் தானே? கல்லானுலும் கன வன், புல்லா குலும்புருசன்னு சொல்லுவாங்களே தெரிஞ்சவங்க அன்னிக்கு என் மச்சான் என் சங்கிலி யைக் கேட்டதுக்கு அப்பவே அதைக் கழற்றிக் கொடுத் திருந்தா ஏன் இம்மாதிரி தொந்தரவு வரப்போகுது என் கழுத்துச் சங்கிலி இதோ இருக்குது. இதை அடகு வச்சுப் பணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க. மச்சான் என்ன பாடுபடுமோ ஒண்டியாக. அதுக்குச் சமயத்துக்கு பிரயோசனப்படாத என் சங்கிலி எதுக்கு என் கிட்டே இருக்க வேணும்? இப்பவே என் ஆசை மச்சானைப் பார்த்தாத்தான் என் உசிர் என் மேனியிலே தங்கும் அண்ணி!' என்று ஒரே மூச்சில் சொன்னுள் பூவம்மா

பூரணி மின்வெட்டுப்போல ஏதோ யோசித்துவிட்டு அவளை ஊன்றிப் பார்த்தபடி, "பூவம்மா! உடம்பை அலட்டிக்காதே, அம்மா! உன்சங்சிலியை எடுத்துக்கிட்டு இப்பவே பணம் வாங்கி வருகிறேன். பேசாமத் தூங்கு! விடிஞ்சதும் 'அவர்' வந்ததும் ஒன் னைக் கொண்டுபோய் உன்புருசன் கிட்டே விடச் சொல்லுறேன். கூட்டு வண்டியிலே வைத்தியர் குரல் மாதிரி கேட்குதே !" என்று சொல்லித் தன் பேச்சுக்கு முற்றுப்புள்ளியிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/122&oldid=1494479" இலிருந்து மீள்விக்கப்பட்டது