பக்கம்:இனிய கதை.pdf/123

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

138

                   138

அங்கு வந்த வைத்தியர், ஹரிகேன் விளக்கைத் திண்ணையில் வைத்துவிட்டு, பூவம்மாவை நாடி பிடித்து பார்த்தார்; ஏதோ ஒன்றைச் சொன்னுர் ரகசியமாகப் பூரணியிடம். அவள் புன்னகை பூத்தாள்.

"பூரணி, சொல்ல மறந்துப்பிட்டேன். உன் புருசன் அவசரமா அசல் ஊருக்குப் போருளும். பூவம்மாவைப் பத்திரமாகக் கவனிச்சுக்கச் சொன்னன், படிச்சுப் படிச்சு. பூவம்மா, போயிட்டு நாளேக்கு வருறேன் அம்மா... இனி ஒனக்கு நல்ல வேளை தான். சிரிச்சுக்கிட்டு இரு'!"என்று சொல்லிச் சென்ருர் வைத்தியர். அவர் காதுடன் காதாகத் தன்னிடம் சொன்ன ஒரு சொல் அவளே இன்பலோகத்திற்குப் புஷ்பக விமானத்தில் வைத்துத் தூக்கிச் சென்றது.

"அண்ணி, இந்தாங்க சங்கிலி... போய்வாங்க " என்று தன் கழுத்துச் சங்கிலியைக் கழற்றி அவளிடம் கொடுத்தாள் பூவம்மா.

விடிந்தது பொழுது, உதய ஒளியின் முதற் கதிர் கோலம் பரப்பி யிருந்தது கண்ட இடமெங்கும்.

பூவம்மா வாசலிலேயே உட்கார்ந்துவிட்டாள். கூடப் பூரணியும் இருந்தாள். தன் கணவன் இரவு முழுதும் வீடு திரும்பாதது புதிராகத்தான் தோன்றியது பூரணிக்கு.

அன்றுதானே பதினெட்டாம்பெருக்கு! எட்டிப் பிடிக்கும் தொலையில் ஒடிக்கொண்டிருந்த காவிரியில் குளித்து முழுகிக் கும்பிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார் கள் பெண்கள். மற்றப் பண்டிகைகள் மாதிரி அன்றும் ஒரு சுபதினம் விருந்துக்கும் வேடிக்கைக்கும் அன்று பஞ்சமிராது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/123&oldid=1494480" இலிருந்து மீள்விக்கப்பட்டது