பக்கம்:இனிய கதை.pdf/13

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14 ."அப்படி யெல்லாம் சொல்லாதே. தர்மசாசா நம்ப ளுக்கு ஒறவா என்ன நம்பமனசுப்படி நடக்கறதுக்கு?... ம்!...இதைக் குடிச்சிடு அப்பாலே சுடு கஞ்சி கொண்டா ரேன்." அன்பு எதையும் கேட்பதில்லை என்பார்கள். ஆனல் அவளோ தண்ணிரைக் கொடுத்துக் கொண்டிருந்தாள். சற்று முன்னம் உணர்வு தப்பிய கோலத்தில் நடந்த போராட்டத்தையும் குழப்பத்தையும் எண்ணிப் பார்க்க முயற்சி செய்தது அவள் வரை விரயமே! பிடிவாதத்துக்கு மருந்து கொடுக்கப்பட்டது. “முன்னே போலே இப்ப ஒடித்திரிஞ்சு வேலை செய்ய ஏலல்லேயே, தம்பி!... அன்னன்னையப் பொளு தைக் கடத்தோனுமே, என்ன செய்யிறது?” சுள்ளி கொண்டு வருவாள்; புல்கட்டு சுமப்பாள்; இலைதழை சேகரம் செய்வாள்; அரிசி புடைப்பாள்: பாத்திரம் பண்டம் கழுவு வாள்; எடுபிடி அலுவல் அவளுக்கு அத்துபடி. செல்லாயியின் வாழ்க்கை அனுபவங் கள் இவை. சாண்வயிற்றுக்குப் 'பதில்' சொன்ன உழைப்பின் சுருக்கம் இது.

.'அக்கா, உன்ளுேட சொந்தக்காரரு கந்தசாமி கிட்டே நீ குடுத்து வச்சிருக்கிற பணத்தை வாங்கு; ன முதலிலே வைத்தியர் கிட்டே கைகாட்டி மருந்து சாப்பிடு; அப்புறம் வயத்துக்கும் வஞ்சனை செய்யாமச் சாப்பிடு!" "ஆபத்து சமயத்துக்கு ஒத்தாசையா இருக்கணு மின்னு இருபத்தேளு ருவா என்ளுேட பணம் அங்கே இருக்கு, அம்புட்டுத்தான்! எல்லாத்தையும் ஒரேமுட் டாச் செலவு செஞ்சிட்டா, அப்பாலே என்ன செய்யுறது முருகா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/13&oldid=1491251" இலிருந்து மீள்விக்கப்பட்டது