பக்கம்:இனிய கதை.pdf/14

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

15

           "மரம் வச்ச மகராசன் தண்ணி 
    ஊத்தமாட்டாளு?... உடம்பை அலட்டிக்காம 
   இதை முதலிலே குடி, அக்கா!" "ம்!"- 
   உந்திக்கமலத்திலிருந்து புறப்பட்டது!
        தாமரைக் குளம் குறுஞ்சிரிப்பை உதிர்க்க 
        த் தொடங்கியது.
  'குடுகிடு கிழவி' 'குறுகுறு' வென நடை பயின் 
  ருள் காளி.ஆத்தாள் வழிமறித்தாள்; தேடிவந்த 
 தெய்வத்தை நாடிச்சென்று கை தொழுதாள்; 
 செல்லாயியின் பார் வையைக் கண்ணிர் 
 மறைத்தது. ஆமா, அந்தத்தம்பி சொன்னது 
 நூத்திலே ஒரு சேதிதான்; அமயஞ் சமயத் துக் 
 கிண்ணுதானே வாயைக் கட்டி வவுத்தைக் கட்டி 
 காசு சேத்துக் குடுத்து வச்சிருக்கேன்; இதை 
 விடவா வேறே கெட்டவேளை வேணும்?.........
 இருபத்தேழு ரூபாய் அவள் முன் சலவைத்தாள் 
 உருவில் காற்றில் அழகு காட்டிப் பறந்தது; 
 மறைந்தது. சாலை ஐயர் கடைப் பட்சனங்கள் 
 தோன்றின; ஆட்டு இறைச்சி, நண்டு, 
 வெளவால், மீன் முதலியனவும் நாக்கில் நீர் 
 ஊறச் செய்தன; மாற்றுப் புடவை சொக் குப் 
 பொடி துவத் தவறவில்லை. துளைத்தெடுத்த இரு 
 மலைக்கூட ஒரு பொருட்டெனக் கருதாதவளாய் 
 வழி 
 மிதித்து விழி பதித்து நடந்தாள் அவள். சோளக் 
 கதிர்கள் உடலில் உரசின, வயல் வரப்புகள் 'பித்த 
 வெடிப்புப் பாதங்களை நோகச் செய்தன.
            "வா, பெரியம்மாயி!"
            "யாரது?"
            "நாந்தான் கந்தசாமி!"
            "ஒன்னைத்தா தேடி வந்தேன் தம்பீ"!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/14&oldid=1489734" இலிருந்து மீள்விக்கப்பட்டது