பக்கம்:இனிய கதை.pdf/16

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

17 " டுப் போயி அடக்கம் செய்யிறதாம்? ... ஒன் சொந்தக் காரன் நான் தானே செஞ்சாகனும்?...... ஆதுக்கெல்லாம் செலவுக்கு வேணுமா?......... இல்லே தெரியாமத்தான் கேக்கறேன்!” "ஐயையோ!...ஆத்தாடி!" நல்ல வேளை பூமிவெடித்து அவளை விழுங்கிவிட வில்லை! மிளகாய்ப் பாத்திப் பணியில் கவனம் பதித்திருந்த கந்தசாமி, குனிந்ததலே நிமிராமல் இருந்தான். "உசிரும் ஒடம்புமாத் திரியிறப்பத்தானே என் பணம் எனக்கு ஒதவோணும்?... நானு செத்துப்பூட்டா, அந்தக்கட்டையை அதோ அந்த எரியிற காளவாயிலே தூக்கி விசிறிப்போடு, தம்பி!...... வாய்க்கு ஒணக்கையா வயசு காலத்திலே ஏதாச்சும் சாப்பிட்டுச் சாகிறேன், தம்பி! ஒனக்குக் கோடிப்புண்ணியம் கெடைக்கும். என்னேட காசு பணத்தை ஒந்தலையைச் சுத்தி ஏம் பக்கமா வீசிப்போடு!”...அழுதாள்! கூன் விளுந்த முதுகு மேலும் குறுகி வளைந்தது. பட்டிக்காட்டு மண்ணும், பாடுபட்டு உழைத்த உழைப்பும் அவளைக் கண்டு எள்ளி நகையாடினவோ? பின், ஏன் கந்தசாமி அப்படிச் சிரிக்கிருன்?...... எரியும் காளவாய் ஏன் அவ்வாறு வேண்டும்? "சரிப்பா தம்பி, சரி!...... நீஎம்பணத்தை அப்படியே பத்தரமாப் பூட்டி வச்சுக்க" சல்லிக்காசுகூட எனக்கு வேணும். நான் வாரேன்!...... ம்ம் . . .... ஆத்தா!....."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/16&oldid=1491255" இலிருந்து மீள்விக்கப்பட்டது