பக்கம்:இனிய கதை.pdf/17

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18

 'மெய்யாலும் நானு இனிமே உசிரோடயிருக்கவே

படாது!...... '

 கடந்த ஐந்து நாழிகைப் பொழுதாக செல்லாயி 
 கிழவிக்கு இந்த ஒர் எண்ணம்தான் மேலோங்கி 
 நின்றது. எட்டாத் தொலைவும், பயம் மண்டின 
 காடும், விடுதலை தரவல்ல கு ன் று க ளி ன் 
 கூட்டமுமே அவளுடைய சிந்தையில் சுழன்றன. 
 வழிநாள் அவளுக் குப் பயம் காட்டிற்று; இது 
 பரியந்தம் ஒண்ட இடம் தந்த அந்த மண் 
 மாதாவுக்குக் கடைசி வணக்கம் சொல்லிவிட்டுப் 
 புறப்பட்டாள் அவள். நாளைக்கு நீ கட்டையைப் 
 போட்டுப்பிட்டா, அனுதைச் சாவுன் னு சொல்லி 
 ஒன்ளுேட சொந்தக்காரளுன என்னைப் பாத்து 
 ஊரு 
 ஏசுமே?......' என்ற கந்தசாமியின் சொற்கள், 
 அவள் காதுகளில் எதிரொலித்தன. என்னைப் 
 படச்ச ஆத்தாவுக்குக் கூட இனிமெ எ ன் ன லே 
 ஒரு தொல்லையும் இருக்காது!'
 செல்லாயி நடந்தாள்: முருகன் எதிர்ப்பட்டான்.
 நடந்த கதைக்கு வியாக்யானம் கேட்டான்; 
 சொன்னுள்.
 "அக்கா இதிலே ஏதோ சூது இருக்கு; அவனுக்கு 
 இப்பகை ரொம்ப எறக்கமாம்; ஊருக்காட்டிலே 
 பேசருங்க; காய்கறி லாவாரத்திலேயும் ஏகப்பட்ட 
 நஷ்டமாம்; உன்பணத்தைச் செலவழிச்சிருப்பான்! 
 அதுக்குத்தான் இம்பிட்டுத் தில்லுமல்லு!...... 
 கந்தசாமி இப்பத்தான் ஒத்தக்கடை ரோட்டிலே 
 ரேக்களா வண்டியிலே போருளும்...! 
 பொட்டிக்கடை ராவுத்தர் சொன் குரு 
 வருத்தப்படாதே, அக்கா. மணியக்கார ஐயா 
 கிட்டே அந்திக்குக் கண்டு பேசி, இதுக்கு ஒரு 
 வளி செய்யறேன். அதுவரை நம்ப வீட்டிலேயே 
 வந்து படுத்துக்க!" என்று உரைத்தான் முருகன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/17&oldid=1489758" இலிருந்து மீள்விக்கப்பட்டது