பக்கம்:இனிய கதை.pdf/18

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

19

"ராவுலே கந்தசாமிப் பயல் வயல்காட்டுக்கு காவ   லுக்குப் போனதும், அவன் வீட்டை ஒடைச்சு எம்  பணத்தை எடுத்துக்கிட்டு ஒடியாந்திட்டா என்ன?”   என்று ஓடிய அந்த ஆலோசனை எங்கே? பொட்டுப்  பொழுதுக்கு முந்திப்பிறந்த அந்த வைர நெஞ்சம் 

எங்கே? "ம்!" செல்லாயி சிரித்துக்கொண்டாள் . "என்னுக்கா, சிரிக்கிறே?" "என்னை நெனச்சுச் சிரிக்கிறேன், முருகா!" "ஏன்னமோ, எனக்கு எதும் புரிய மாட்டேங்குது!" அவனுடன் அவள் நடந்து சென்று கொண் டிருந்தாள். "இந்தா பாட்டி, உன் பணம்!" பவளக்கொடி நின்றள் "ஏது கண்ணு?சிலையாளுள் கிழவி. "நீங்க கந்தசாமி அண்ணுச்சியிடம் கொடுத்துவச்ச பனந்தான் இது. இந்தா எண்ணக்க, சரியா இருபத் தேழு ரூபா இருக்கு. காலம்பற குடிக்காட்டிலே நீங்க ரெண்டு பேரும் தர்க்கம் பண்ணிக்கிட்டதை நான் சோளக்கொல்லை மறைவிலே ருந்து ஒட்டுக்கேட்டேன். நீ வீட்டுக்குப் போனதும் அந்த அண்ணுச்சியோட வம்பு பண்ணி, பணத்தைக் கறந்துகிட்டு வந்திட்டேன். "நீ மகராசியாக எளுதிக் கெடக்கனும், தாயே!”நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் அவளுக்குக்கனவு போன்றே தென்பட்டது. ரூபாய்த் தாள்கள் சில, கிழவியின் மெலிந்த வலது கைக்குள் அடங்கின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/18&oldid=1491256" இலிருந்து மீள்விக்கப்பட்டது