பக்கம்:இனிய கதை.pdf/19

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

20

 "இனி ஒரு பத்து இருபது நாளைக்கு வேணுங் 
 கிறதை நல்லாச் சாப்பிடு, பாட்டி!” என்ருள் 
பவளக்கொடி.
 "ஆமா, ஆமா, நான் அக்காளைக் கவனிச்கக் 
 கிறேன், தங்கச்சி!” என ஆறுதல் தெரிவித்தான் 
 முருகன்.
 "இரு பவளக்கொடி, கடையிலேருந்துசுடுத்தண்ணி 
 வாங்கியாரச் சொல்றேன்! நீ தாம்மா இப்ப 
 எனக்குக் கைக்கு மெய்யான சாமி!"-வழிந்தது 
 ஏழை மனம்.
 அப்போது, "பாட்டி, உங்க கந்தசாமி ரேக்களா 
 வண்டியிலே யிருந்து உருண்டு விழுந்து 
 கெடந்ததைக் கண்டு மணியக்காரஐயா 
 வண்டியிலே தூக்கிப்போட்டா ந் திருக்காக; 
 வழியிலேயே உயிர் போயிட்டுதாம். அவரு 
 பெண்சாதிக்கு சொல்லி அனுப்பவேணுமாம்; 
 பிணத்தை அடக்கம் செய்யனும்; தம்பிடி காசு 
 அங்கே இல்லையாம்!.........என்று துயரச் 
 செய்தியை வெளி யிட்டான் ஒருவன்.

"நெசம்மாவா?..... ஐயோ......கந்தசாமி......"
 ஒப்பாரி வைத்தாள் கிழவி. அடுத்த இமைப் 
 பொழுதில் செல்லாயி ஒட்டமும் நடையுமாகச் 
 சென்று கொண்டிருந்தாள்'
 "நானும் ஒருத்தி உசிரோட இருக்கிறப்போ, எங்க 
 கந்தசாமித் தம்பி எப்பிடி நாதியத்தவனுவான் ...?
 இருபத்தேழு ரூபாய் கூட்டுச்சேர்ந்து 
 சிரிக்கலாயின.
 பிறைக் கீற்றுக்கு அடியில் அமர்ந்திருந்தாள்
 பவளக்கொடி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/19&oldid=1489760" இலிருந்து மீள்விக்கப்பட்டது