பக்கம்:இனிய கதை.pdf/22

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

23

                     23 வன் திரும்ப மேற்குப் புறம் மண்டையைத்  திருப்பிவிட லானன் 'ஆல் ரைட்' இனி ஒண்னும் ‌‌  பாக்கி இல்லே இந்தப் பக்கத்துக்கு!...ம்.

அவன் நடை தொடர்ந்தான், நடை தொடர்ந்தது. வழி தொடர்ந்தான்; வழியும் தொடர்ந்தது. அவன் அழகேசன் ஆவள் பிறந்தது குபேர புரியா? இல்லே அழகா புரியா? ஊஹடும்! மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலைச் சதமென்று நம்பியிருந்த குடும்பத்துக்குக் கிட்டிய தெய்வப் பிச்சை அவன். பிச்சை என்ற பெயரை மாற்றிக்கொண்டான். பெயரில் மட்டும் அழகு இருக்க வில்லை; உருவிலும் அழகு இருந்தது! இப்போது அவனுக்கு வீரமா காளியம்மன்தான் துணை! அரைக்கணம் நின்ருன்; நெடுமூச்சுப் பிரிந்தது. நெஞ்சைத் தொட்டான். நெஞ்சம் தொட்டவள் நினைவில் நிழலாடி உயிரில் உறவாடினுள், 'மங்களம்' இதழ்களின் ஈரம் உள்ளத்தினின்றும் ஊறியதோ? ஊறிய இளநகையினூடாக உயிர் தழைக்கக் கண்டான். அவ்வினிய நல்லுணர்வு அவனுக்கு வாழ்வாகியது. நடந்தான்; நடந்துகொண்டிருந்தான். அதோ கொல்லம் ஒடு போட்டிருக்கின்றதே ஒரு வீடு அதுதான் கள்ளர் தெருவுக்குத் தோரண வாயில் போலே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/22&oldid=1491261" இலிருந்து மீள்விக்கப்பட்டது