பக்கம்:இனிய கதை.pdf/23

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

24

                    24
அழகேசனுக்கு நெஞ்சு   அடித்துக்கொண்டிருந்தது. திரும்பிய வேளையில் 

'டீ 'அடித்துக்கொண்டிருந்தவன் தென்பட்டான். தென்பட்ட அந்த ஒர் உறைக் கடிதத்தை மறுமுறையும் பார்த்துவிட்டு அந்தப்பார்வை உண்டாக்கிக் காட்டிய சுடுவெள்ளத்தின்

உணர்வையும் நெகிழ்த்திவிட்டு தோளில்   தொங்கிய காக்கிப் பையில் மீதிக் கடிதங்களை  அழுத்தியவஞ க இதயத்தை அழுத்திய சுமையை 

இறக்க விழைந்து சாயாக்கடை பெஞ்சு ஒன்றில் குந்தியபோது வாசல் வழி கடந்த சினிமா வண்டியில் ஒட்டப்பட்டிருந்த அந்தத் திரை அழகியின் உருவத்தில் அவனுடைய மங்களம் 'மிக்ஸ்’ ஆன விந்தையின் விரிப்பு அவனுள் சொர்க்கம் காட்ட அவ்விதமான அதிசயத் தெம்புடன் 'எல்லாம் என யாளும் ஈசன் செயல்' என்ற ந டைமுறைப் போக்குடன் சாயாவை மிடறு இறககச் சுவைத்துப் பருகத் தொடங்கிளுன்! இந்த வாக்கியம் மட்டும் தானு பெரிது? ஆம்; அவனுடைய பெருமூச்சுந்தான்! சாயா கிளாஸையும் சில்லறையையும் நீட்டிவிட்டு

கல்லாவில் கிடந்த செய்தித்தாளை எட்டி எடுத்தான். 

அதற்குள் எங்கிருந்தோ பூமணத்தின் நெடி காற்றில் மிதந்து வரவே நுகர்ந்தான். ஒரு ஜோடி! இளம் வயசு. நல்ல பொருத்தம். அழகேசனுக்கு வெட்கம் வந்துவிட்டது வெட்கம்! இந்த வெட்கத்திற்கும் ஒரு கதை உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/23&oldid=1491264" இலிருந்து மீள்விக்கப்பட்டது