பக்கம்:இனிய கதை.pdf/24

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

25

சம்பளம் வந்தால் சாப்பாடு என்ற நி லை யி ல்

வாழ்ந்து காலம் தள்ளிய-காலத்தைத் தள்ளிய 
குடும்பம் அவனுடையது. பெற்றவர்களின் கனவை 
நிறைவேற்ற அவனே இலக்குப் புள்ளியும் ஆனன். 
ஆகவே அப்பா வுடன் மகனும் மகனுடன் அப்பாவும் 
ஒத்துப்போய்' வாழ்வின் சுமைக்குப் பங்கு 
ஏற்கவேண்டிய கட்டம் உருவானது. படித்தபின் 
அஞ்சல் சேவகன் அலுவலுக் குரிய பரீட்சை 
எழுதினன் அவன். அஞ்சேல் என்றது அஞ்சலகம். 
வேலை கிடைத்தது. தந்தையின் சேமிப்புடன் 
தனயனின் சேமிப்பும் இணைந்தது.
 தலைமகனுக்குப் பெண் பார்க்கும் வேலை 
அம்மாவுக்கு
வாய்த்தது. அவளுக்கும் ஒரு வேலே 
வேண்டுமல்லவா?
  மங்களத்தின் ஜாதகம் ராஜ ராஜ சோழனின் 
பட்டணத்திலிருந்து பிரகதீஸ்வரர் ஆசியுடன் 
திருப்பதி எக்ஸ்பிரஸில் ஏறி வந்தது; அழகேசனும் 
மறு தினம் அதே வண்டியில் குடும்ப சகிதம் 
இறங்கி 
வரவேண்டிய வன் ஆளுன்,
  இப்போது அதிர்ஷ்டம் இரங்கி வந்தது.
  இயல்புகொண்ட அழகியான மங்களம்    
மங்கலத்தின்சின்னமாக-நாணத்தின் பதுமையாக 
இயற்கையான பண்புகொண்ட எளிய நாகரிகத்தின் 
புஷ்பமாக பொலிவு காட்டியபோது அப்பொலிவைப் 
பூரணமாக ரசிப்புதற்குள் அழகேசனுக்கு வெட்கம் 
வரவேண்டுமா பாவம்!
   பாவமாவது?
  அவன் புண்ணியம் செய்தவன் ஆயிற்றே! 
அதனுல் தான் அழகேசனுக்கு இந்தப் புண்ணியவதி 
கிடைத்தாள்.
 செய்தித்தாள் கூப்பிட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/24&oldid=1489963" இலிருந்து மீள்விக்கப்பட்டது