பக்கம்:இனிய கதை.pdf/25

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

26

                    26
ஒட்டினன் மனத்தை; ஒட்டின்ை பார்வையை.
  புருஷனிடம் ஆசையாக சிமிக்கி வாங்கித் 
தரும்படி பலநாள் கேட்டாளாம் மனைவி கணவனுல் 
வாங்கித்தர முடியவில்லையாம். இதனுல் தாலி 
பெற்றவள் தாலி கட்டியவனை ஏசிப்பேச கடைசியில் 
வெட்டுப்பழிவரை வளர்ந்துவிட்டதாம்__எங்கோ 
ஓரிடத்திலே!
  அழகேசனின் விரல் நடுக்கம் பத்திரிகையை 
நழுவ விட்டது.
 இன்னுெரு தலைப்பு.

'முதல் பிரசவத்தில் அழகு மனைவி மரணம்’

 நெஞ்சை அடைத்தது.
 பத்திரிகையைத் தூக்கி வீசிவிட்டு எழுந்து நடக்க 
முயன்ருன் அவன். "மங்களம்..." என்று தன்னுள்- 
தன் உதட்டுக் கரைக்குள் மனையாட்டியின் 
திருப்பெயரை உச்சாடனம் செய்யத் தலைப்பட்டான் 
அவன்.
   அதோ ஓர் அதிசயம்!
   பாதிரிப் பழத்தின் இனிப்பும் ரோஜாப்பூவின் 
சிரிப்பும் இரண்டறக் கலந்துவிட்டனவே!
 ஆஹா மங்களத்துக்கென்று ஒரு சிரிப்பா?
 ஆஹா சிரிப்புக்கென்று ஒரு மங்களமா?
அந்தக் கணி துலங்கும் கருவச்சிரிப்புக்கு இப்படியும் ஒரு கனமா?
ஆமாம்! 
  பூங்காவின் முகப்பைக் கண்ட உடனேயே அதன்
அழகை அமைப்பை-பூரிப்பை அனுபவிக்க எத்தனங் 
செய்யும் ரசிகனை ஒப்ப அழகேசன் ஆளுன் ,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/25&oldid=1489962" இலிருந்து மீள்விக்கப்பட்டது