பக்கம்:இனிய கதை.pdf/26

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

27

                    27

சற்றுமுன் வாசித்த செய்தித் துணுக்குகள் மீண்டும் அலைபாய்ந்தன. அவன் போக்கே தனி. முதன் முதலிலேயே அவளிடம் அவன் சொன்னுன் மங்களம் வாழ்க்கை என்கிறது ரொம்பச் சோதனை கொண்டது. நீயும் நானும் புதுசு. ஆனதாலே நாம ரெண்டுபேரும்தான் எதுக்கும் எப்பவும் மனசு ஒத்துப் போகவேனும் விரலுக்குத் தக்கனை தான் வீக்கம்: அது மாதிரிதான் நாமும் நம்ம வாழ்க்கையை அமைச் சுக்க வேணும். ஆன மனசிலே எந்த ஒரு கிலேசத்தை யும் ஆசையையும் தங்க வைக்கப்பிடாது. நம்மளுக் குள்ளே எந்த ஒரு ச ல ன ம் உண்டாச்சின்னலும் அப்பவே தீர்த்துக்கிடுவோம்! இப்படிப்பட்ட விதத்திலே எல்லாம் நாம ஜாக்கிரதை காட்டாட்டிப் போனுல்தான் வாழ்க்கை நம்மைச் சோதிக்க ஆரம்பிச்சிடும்; வாழ்க் கையும் நமக்குச் சோதனை ஆயிடும். அப்புறம் இதே வாழ்க்கை புதிராகவும் ஆகாமத் தப்பாது!...மனசுதான் எல்லாத்துக்கும் மூலம்! சும்மாவா சொல்லியிருக்காங்க மூத்தவுங்க 'மனம் கொண்டது மாளிகைன்னு' அவள் லோட்டாவில் பானைந் தண்ணிர் கொணர்ந் தாள் நன்னுரிவேர் இதமான வாடையும் எலுமிச்சை யின் ஆரோக்கிய நெடியும் அற்புதம்,

'ஒருவாய் குடிச்சிட்டு... என்று ஆரம்பித்தவள் முடிக்கவில்லை.

ஒருவாய் தண்ணி குடிச்சிட்டு ரெண்டுவாய் பேச்சுப் பேசச் சொல்லுறீயாக்கும்? நீட்டிய நீரை ஊற்றிக் கொண்டு நேர் கொண்ட பார்வையால் அவள் பார்வை யை அளந்து பேசினுன் மென்னகையுடன் பேசினன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/26&oldid=1491265" இலிருந்து மீள்விக்கப்பட்டது