பக்கம்:இனிய கதை.pdf/28

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

29

                      29

 வாங்க ..?

 'ம்...?
காற்றில் சிலும்பல் தட்டிப்பறந்த முடிஇழைஒன்றை ஒதுக்கியபடி அவன் சற்றே தயங்கிக்கொண்டு வாசற் படியிலேயே நின்று கையிலிருந்த அட்டை மடிப்பினைப் பிரித்து எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.

'அத்தான்!'

ம்...'

'உள்ளே வாங்க!'

'ம்!..'

'கும்பா கழுவி வைக்கட்டா?'

ம்! ... ஊஹாடும்! இப்பவேண்டாம்! ட்யூட்டி கொஞ் சம் மிச்சம் இருக்குது!'

அதிசயப் பாவையான அவள் கொஞ்சம் நெருங்கி வந்தாள்; கதம்ப மணமும் நெருங்கி வந்தது. சாப்பிட் டுப்புட்டுப் போனு என்னவாம்? ரொம்ப நேரங்களிலே நீங்க ரொம்ப வேடிக்கை யான வங்களாத்தான் தோணு நீங்க? ஆமா உடம்பு சரிப்படலையா? மூஞ்சி என்னவோ மாதிரி இருக்கு !அவன் நெற்றிப் பொட்டில் சோற்றுக் கைவிரல் பதித்துப் பார்த்தாள்.

அவன் ஏறிட்டுவிழித்து அவளது தோள்களைத் தொட்டுவிட்டு அவளைப்பற்றியவனுக கூடத்திற்குச் சென்று பழைய பாவனையில் அரைக்கணச் சிந்தனைக்கு ஆளாகிவிட்டு பிறகு ஏதோ நினைப்பில் கோட்டுப் பையில் கையைத் துழாவியபோது ஒரு நாணயம் தட்டுப்பட்டது. அவளுக்குப் பலகாரத்துக்கும் பூவுக்கும் சரி சொல்லியபின் மீதமிருப்பது இருந்தால் அவனுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/28&oldid=1489992" இலிருந்து மீள்விக்கப்பட்டது