பக்கம்:இனிய கதை.pdf/29

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

30

                  30
குச் சாயாவுக்கு உதவும் நினைவுகளின் தடத்தைவிட்டு விலகியபோது கொண்டவள் நின்ற தடத்தைவிட்டு விலகாமல் நிற்கக் கண்டான்.
'நேரம் ஜாஸ்தி ஆயிடுச்சுங்க!'
'எங்கே உன் கடிகாரத்திலேயா?'
'இல்லே உங்க கடிகாரத்திலே!'

இருவரும் சிரித்தார்கள் ஜோடியாக காரணம் இதுதான் இருவருமே கடிகாரம் கட்டி யிருக்கவில்லை!
  ஊராட்சி மன்றத்திலிருந்து சங்கு ஊளையிட்டது. காட்டுப் பகுதி என்ருல் அப்படித்தான்.
   "மங்களா!"
   "என்ஞங்க?"

   அவள் அவனைப் பார்த்தாள். 
   அவன் அவளைப் பார்த்தான். 
   பரிவர்த்தனை செய்யப்பெற்ற பர்வையினுல் விகுடிகள் ஊஞ்சலாடின.
 இருந்திருந்தாற்போல ஏதோ சத்தம் பலமாகக் கேட்டது.
  'என்ன சத்தம் மங்களா?'
'பக்கத்து வீட்டிலே தாங்க!'
 சாமான்கள் புரண்டு சிதறிய ச த் த ம். அதைத் தொடர்ந்று அவலஒலம் அ ழு  ைக உருவெடுத்து ஒலித்தது.
பாவம்! அடுத்து வீட்டுக்காரர் தன் சம்சாரத்தை அடிக்கிருர்? மங்களத்தின் குரல் தழதழத்தது" ஏதோ
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/29&oldid=1489997" இலிருந்து மீள்விக்கப்பட்டது