பக்கம்:இனிய கதை.pdf/32

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

47

                    47
சவால் விடுத்தது. பின் கொண்ட சபதத்தில் 
உள்ளம் ஆறுதல் பெற்ருன் கண்மணி.
 கையில்  ஏந்திய தீபத்துடன்  வெளியே வந்த பூவாயி, தன்  கணவனை ஒருவிசை ஏற இறங்கப் பார்த்தாள். பிரமை பிடித்து மலைத்திருந்த கண்மணியின் முகத்தைக் கண்ட பூவாயிக்கு ஏனே பயமாகப் போய் விட்டது. கூ ண் டி னு ள் நுழையும் பைங்கிளியைப் போன்று தட்டுத் தடுமாறினுள் அவள். கடந்த சில நாட்களாகவே அவள் அடிக்கடி ஊர்ப்பேச்சுக்களைப் பற்றிப் புலன் விசாரித்த வண்ணமாகவே இருந்தாள். காலந்தவறி இரவு வேலைகளில் தன் புருஷன் மனை மிதிப்பதற்குள் பூவாயிக்கு ஜீவன் அவள் வசம் தங்கமாட்டாது.
 "என்னங்க என்னமோ போல் ஒரு மா தி ரி உட்கார்ந்திருக்கீங்களே ? ஏதாச்சும் தகவல்..."
 " தகவல் என்ன பூவாயி? சும்மா போறவனை வலிய வம்புக்கு இழுக்க ஆசைப்படுகிருணும். வடிவேலு. வெள்ளம் தலைக்கு மேலே போனதுக்கப்புறம் சாண் போளுல் என்ன முழம்போனு என்னுங்கற கதைதான். அடுத்த கிழமை ஐயனுறு திருநாளைக்கு வடிவேலுதான் குதிரை எடுக்கப் போருளும். எப்படியிருக்குது சேதி ? வழக்கமா நடக்கும் முறைப்பிறகாரம் பார்த்தா நம்ப தானே இந்த வ ரு சத்துக்குக் குதிரை எடுப்புக்

கொண்டாட வேண்டியவுங்க”.

"அப்ப டீன்கு வடிவேலுதான் திருவிழா துவக்குற துன்னு முடிவாயிருச்சாமா? ஊராங்க ஏதும் சொல்லலையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/32&oldid=1490122" இலிருந்து மீள்விக்கப்பட்டது