பக்கம்:இனிய கதை.pdf/33

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

48

                     48
"ஊராருங்களா? நீ பொம்பளை தானே, ஊராவது ஒண்ணுவது பணக்காரன்  பாரு  அந்தப்பயமவன். இடிச்சபுளி மாதிரி எல்லோரும் வாயடைச்சுப் போயிட் டாங்க போல. ஆன பாரு, பூவாயி, இந்தத்தரம் நான் முதல்லே குதிரை எடுப்பு  ஆர்ம்பிச்சுத் திருநாள் நடத்தல்லே அப்புறம்..”  என்று கூறி முடிப்பதற்குள் இடைமறித்த  பூவாயி,  "உஷ்;  பேசா திங்க!  சேதி உருப்படியா வந்து சேரட்டும். அப்பாலே  பேசிக்கலாம். ஐயனர்  தெய்வத்துக்குக் கண் இருந்தாப் பார்த்துக் கட்டும்.  அடம்செய்யறவுங்க   எப்படியும்  க ஷ் ட ம் அனுபவிக்காமலா  போயிடுவாங்க" என்று  சாந்தப் படுத்தினுள்.
 'ஐயனுர் கோவில் திருவிழா' பூவாயின் மனத்தில் இன்பவேதனை யொன்றைச் சதா  தூண்டிவிடும் ஓர் எச்சரிக்கை  போல  அமைந்து  வந்ததை  அவள் எங்ங்னம் உணராமல் இருக்க முடியும்? அத்தகைய ஒர் அனுபவம் அவள் பேதை உள்ளத்தில் இரண்டறக் கலப்பதற்கு  ஏதுவாயிருந்தும்  அதே  கோவில் வட்டாரங்கள் தாமென்ருல் கேட்கவா வேண்டும். ஒரு நாள் அந்திமயங்கும் வேளை  மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை ஒதுக்கிவிட்டுக் கொஞ்சம் களைப்புத்திர மணல் மேட்டில் சாய்ந்து படுத்திருந்தாள்  பூவாயி. ஆனல் நெடு நேரம் தன்னையே கொட்டக் கொட்ட விழித்து நோக்கிக் கொண்டிருந்த ஒரு வயதுப் பையனை அவள் அந்தக் கணம் பார்க்கவேயில்லை. பூவாயி வயது வந்த பெண் க ல் யா ண பருவம். வாலைக்குமரிக்கு என்னென்ன கனவுகளோ? எப்படிப்பட்ட எண்ணச் சூழ்நிலையோ வாழ்க்கை வருங்காலம் பற்றி அவள் நெஞ்சம் எந்தப் பாணியில் மோடி பண்ணியதோ?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/33&oldid=1490120" இலிருந்து மீள்விக்கப்பட்டது