பக்கம்:இனிய கதை.pdf/34

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

49

                  49



சுய நினைவு உருப்பெற்று விசித்தெழுந்த சமயத்தில் தான், அந்த வாலிபனைக் கண்டாள். உடனே பரபரப்பு; உவகைப் பெருமிதம். அப்புறம் குறு நகையை வதனத் திரையில் குறுக்குப் பாய்ச்சல் ஒடவிட்டாள்.
 "பூவாயி,  பொழுது  சாயப்போவுதே. வீட்டுக்கு வரலையா ?

அவள் ஆச்சரிய மடைந்தாள். "இந்த ஆளுக்கு எம் பேருகூடத் தெரியுதே! என்று வியந்தது அவள் மனம்!
"இதோ புறப்படப் போறேனே! ஆமா நீங்க...... " என்று பூவாயி சுவாதீனத்துடன் கேட்டு நிறுத்தினுள். மாணிக்கத்தை இன்னு மொருமுறை நிமிர்ந்து பார்க்க வேண்டும் போலிருந்தது; பார்த்தாள் அடுத்தவிடிை நிமிர்ந்த பார்வை கீழே தஞ்சமடைந்தது.
"நானு, இதோ-" எனக் கூறி "ட்ரியோ” வென்று ஓர் அதட்டுப் போட்டான் மாணிக்கம். சிதறிக் கிடந்த ஆடுகள்  அப்படியே  சரம் சரமாக ஒதுங்கி நின்றன, அணிவகுத்து நிற்கும் பட்டாளம் போன்று.
பூவாயி அதிசயித்தாள். அவள் கடை இதழில் புன் முறுவல் புறப்பட்டது. மாணிக்கம் சொக்கிப்போனன்.
அப்புறம் இருவருமே சேர்ந்து ஆடுகளை ஒட்டி வரு வார்கள். தழைகண்ட இடங்களில் மேயவிட்டு மரத்து நிழலில் மாணிக்கமும் பூவாயியும் உட்கார்ந்து என்ன வெல்லாமோ  பேசித் தீர்ப்பார்கள். இந்த  நட்பு மூன்ரும் பேருக்கு __ ஏன் பூவாயியின் தகப்பளுருக்கே தெரியாது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/34&oldid=1490123" இலிருந்து மீள்விக்கப்பட்டது