பக்கம்:இனிய கதை.pdf/35

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

50

                      50

 மாணிக்கம் ஒரு நாடோடி. ஊர் ஆடுகளை மேய்த்து ஒரு வழியாக வயிறு வளர்த்துவந்தான். அவன் ஆண ழகன். விசாரிக்கப்போக அவனும் தன் இனம் என்ற புள்ளி விபரம் அறிந்துகொண்டதும் பூ வா யி க்குச் சந்தோஷம் தாளவில்லை. "மாணிக்கம்” என்று வாய் நிறையப் பெயர் கூறி அழைத்துச் சிட்டுக் குருவிபோல பேசிப் பழகிவரலாளுள் அவள்.

 ஆனல் அன்று அப்படிப்பட்ட ஒரு தடங்கல் ஏற் படும் என்று பூவாயியோ அல்லது மாணிக்கமோ ஒரு போதும் நினைத்திருக்க மாட்டார்கள்.   பூவாயி அப் பொழுதுதான் வீடு திரும்பிக்கொண்டிருந்தாள். மாணிக் கமும் வந்திருந்தான். இரண்டு பேரையும் ஜோடியாகக் கண்டதும் அப்படியே சீறி விழுந்தான் பூவாயியின் தகப்பன்.
 "பூவாயி, பெரிய பெண்ணு லட்சணமா இல்லையே! யாரோ  ஒரு  வழிப்போக்கனுேட  'கூடமாடப் பேசிப் பழகினு லேசிலே போகக்கூடிய தகவலா? அப்புறம் ஊர் வாயைத்தான் மூட ஏலுமா? இன்னிக்குச் சொல்றேன், இனி இப்படி அந்தப் பயலோட ஒரு பேச்சுக்கூடப் பேசக்கூடாது. மீறிப் பேசினதைக் கண்டா பெத்த மக வரின் னு பாராமல்கூடக் கொடுவாளாலே உன் தலையைச் சீவிப் போடுவேன்"... என்று எச்சரித்தான். அத்துடன் மாணிக்கத்தை நோக்கி, ஏய் பயலே,  ஊருதேட வந்த வன் ஒழுங்கா முறையா இருக்கமாட்டாய் போல த் தோணுதே! ஜாக்கிரதையா இருந்தா இரு. இல்லாட்டி உன் குடிசை பறிபோயிடும். ஆமா, சொல்லிவிட்டேன்” என்று கர்ஜித்தான் அம்பலகாரன்.

அன்று ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டவர் கள்தாம். அப்புறம் நாளதுவரை வருடங்கள் இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/35&oldid=1490119" இலிருந்து மீள்விக்கப்பட்டது