பக்கம்:இனிய கதை.pdf/36

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

51

                    51

ஓடிவிட்டன. மாணிக்கத்தைப்பற்றிய விபரமே தெரிய வில்லை.

மறுநாள் தன் மகளே அம்பலம் வாஞ்சையுடன் அழைத்து, "பூவாயி, நேத்து உன்னைக் கோவிச்சதுக்கு மனசு  கலங்காதே.  உன் நன்மைக்கோசரம்  தானே இவ்வளவு பாடாய்ப்படறேன் நான். நம்ப கண்மணி அடுத்த மாசம்  பிளுங்குச்  சீமையிலே ருந்து வர தாகத் தபால் போட்டிருக்கு. அதுக்கு உன்னைப் பரிசம் போட் டிருக்கப்போ அன்னிய வங்களோடு சகவாசம் வச்சிருந் தாப் பாக்கிறவுங்க என்னதான் எண்ண மாட்டாங்க..."

என்று புத்திபுகட்டின்ன.

காலம் கரைந்தது. பூவாயினது பூங்கரம் பற்றினுன் கண்மணி. நல்ல பொருத்தம் என்று பேசிக்கொண்டார் கள் நாட்டுப்புற ஜனங்கள்.

ஊர் என்ருல் சண்டையும் சச்சரவும் ரொம்பவும் சகஜம். என்ருலும் அந்த ஊரில் ஐயனர் திருவிழாவை ஒட்டிக் கிளம்பின பூசலைப்போல் இதற்கு முன் நிகழ்ந்த தில்லை என்றுதான் சொல்லவேண்டும். நியாயம் தலை மறைவில் ஒதுங்கிக் கிடந்தது.

அந்தக் கிராமத்தில் இரண்டு "கரை"__அதாவது இரண்டு தரப்பு நாட்டாண்மை. ஒன்றிற்கு அதிபன் கண்மணி, எதிர்க்கட்சி வடிவேலுவின் தலைமை. ஒவ் வொரு உற்சவமும் ஆரம்பிப்பதற்கு முன் கோவில் சன்னதியில் எந்தக் கட்சி 'குதிரை எடுப்பு’ எடுக்க வேண்டுமென்பதை நிர்ணயிக்கும்பொருட்டு சீட்டுக்கள் குலுக்கிப் போடுவார்கள். குலுக்கி எடுக்கப்பட்ட சீட்டின் உத்திரவை தெய்வக் கட்டளையாக எண்ணி அதன்படி நடப்பார்கள். இதுவே நியதி. அம்மாதிரித்தான்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/36&oldid=1490132" இலிருந்து மீள்விக்கப்பட்டது