பக்கம்:இனிய கதை.pdf/37

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

52

                52

கண்மணி வி ழா வி ற் கு உரியவன் என்று அன்று கண்டிருந்தது. ஆனல் வடிவேலு இதற்குச் சம்மதிக்க வில்லை. அவன் அந்த வட்டாரத்தில் பழைய பேர் வழி. ஆள்கட்டும் ஜாஸ்தி. இரண்டு வகையிலும் தன் பக்கம் வலு அதிகமாக இருக்கையில் கண்மணியைத் துச்சமாக எண்ணிவிட்டான் வடிவேலு.

 "மாமா இந்தச் சங்கதியிலே நாம் தலையிடாமே ஒதுங்கிக்கிட்டா என்ன? வினை செஞ்சவுங்க வினை அனுபவிக்கமாட்டாமல் இருக்கமாட்டாங்க. மானங் கன்னியாக அம்பிட்டுக்கிட்டு அப்புறம்..." என்று எவ்வளவோ நயமாகக் கண்மணியிடம் சொல்லிப் பார்த்தாள் பூவாயி,
"உயிர்போனலும் சரி, வடிவேலுவை இந்தத் தடவை! ஒரு கை பார்த்து முடிச்சாத்தான்  மனசு சும்மா கிடக்கும்” என்று சபதம் செய்துகொண்டான் கண்மணி.
 பூவாயியின் விழிக்கோணத்தில் நான்கு _முத்துக்கள்கண்ணிர்!  கதி கலங்கினுள்.

விடிந்தால் ஐயனுர் கோவில் குதிரையெடுப்பு நாள் இரவு ஊரடங்கிய தருணம், புலர்ந்ததும் திருவிழாவைப் பற்றி எப்படிப்பட்ட பூசல்கள் உதயமாகுமோ என்று நினைத்து நெஞ்சுருகிய பூவாயிக்குத் தூக்கமே பிடிக்க வில்லை. “ஐயணுரு தெய்வமே, அத்தானுக்கு உன் கிருபையாலே சங்கடம் எதுவும் வராமல் நீதான் ஒத் தாசை செய்யனும். அது ஒண்டிக்கை மனுசன்” என்று வேண்டிக்கொண்டாள் அவள்.

வாசலில் காற்ருடப் படுத்திருந்தான் கண்மணி. அவன் கண்கள் விழித்திருந்தன. உள்ளமும் விழிப்பில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/37&oldid=1490139" இலிருந்து மீள்விக்கப்பட்டது