பக்கம்:இனிய கதை.pdf/38

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

53

                    53

ஈடுகொடுத்துச் சுழல்வட்டம் பாய்ந்தது. விடியவும் நடக்கவிருக்கும் சம்பவத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்த் தான், யுத்த அரங்கிலே சிந்தனையைச் செலவிடும் தளபதி மாதிரி. அவனுக்கும் கையாட்கள் பலர் இருக் கத்தான் இருந்தனர். நியாயத்திற்குத்தானே மதிப்பு அதிகம் கிடைக்கும்?

'திடு திப் பென்று யாரோ மரத்தடியில் மறைந்து வருவது தெரிந்தது. உடனே 'விசுக்,கென்று எழுந் தான் கண்மணி. தன்னைப்பற்றி வேவு பார்க்க யாரை யாகிலும் வடிவேலு அனுப்பியிருப்பான் என்பதை அறிந்ததும் அவன் சந்தேகம் வலுக்க எத்தனித்தது.

"பூவாயி" என்று மெல்லக்குரல் கொடுத்து விட்டுக் கையில் லாந்தர் விளக்குடன் மெல்ல அடியெடுத்து வைத்தான் கண்மணி. நீண்ட சுழல் கழியுடன் ஓடி வந்தாள் பூவாயி. அவள் நீட்டிய கம்பை வாங்கி கண்மணி பதுங்கியிருந்த ஆளை ஒரு முறை உற்றுப் பார்த்து விட்டு, 'கட்டாயம் இந்தப் பயல் எதிரி ஆள் தான் என்று சம்சயித்தவனுய்க் கம்பை ஓங்கி அந்தப் புதுமனிதன் மீது வீசப்போன்ன, ஆனல் அந்த ஆளை ஆழ்ந்து நோக்கினுள் பூவாயி.

"ஆ, மாணிக்கமா?” என்ற அவள் ஒலம் ஓசை எழுப்பி எதிரொலித்தது. கண்மணிக்குத் திகைப்பு மேலிட்டது. நல்ல வேளை அவன் ஒதுங்கினன்.

"மாணிக்கம், என்ன இப்படி இந்தக் கும்மிருட்டியே வந்திருக்கீங்க கொஞ்சம் உங்களை கவனிக்காமப் போயிருந்தால் எம்பிட்டு வினையா முடிஞ்சிருக்கும் ?”

"பூவாயி, உனக்கும் உன் புருசனுக்கும் ரகசியம் ஒண்ணுமே தெரியாதாங்காட்டியும். உங்க எதிரிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/38&oldid=1490141" இலிருந்து மீள்விக்கப்பட்டது