பக்கம்:இனிய கதை.pdf/39

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

54

                  54
 அல்லாரும் உன் புருசன அப்படியே அடிச்சுப்போட யோசனை பண்ணி ஆட்களைச் சேர்த்திருக்காங்க. சாயந்திரந்தான் சேதி விழுந்திச்சு. ஒடியாந்தேன், உங்ககிட்ட சொல்றத்துக்கு ஐயனரு புண்ணியத்துலே நான் தப்பிச்சுட்டேன்........ '"என்று இழுத்தான் மாணிக்கம்.
 அப்பொழுது கொஞ்சந் தொலைவில் விளக்கு வெளிச்சமும் ஒருசிலர் வருவதும் தெரிந்தது. 'ஒரு வேளை வடிவேலு கோஷ்டியாத்தான் இருக்கும்’ என்ற ஐயத்துடன் கண்மணி விரைந்தான் எதிர்நோக்கி, மாணிக்கமும், பூவாயியும் பின் தொடர்ந்தனர்.
 "அண்ணுச்சி, உங்களை எங்க ஐயா வடிவேலு அழைச்சுக்கிட்டு  வரச்சொன்னுருங்க. என்னமோ சமாச்சாரம் சொல்லணுமாம்" என்று ஒருவன் ஓடிவந்து கூறினன்.
 "ஏலே, ஒன்னை எனக்குத் தொயுமடா. என்னை வஞ்சகமாகக் கொல்லச் செய்யற சூழ்ச்சியிலே இதுவும் ஒருவழியாக்கும்! யாருகிட்டே கயிறு திரிக்க உத்தேசம்? கண்மணியின் வார்த்தைகளில் கோபம் பொரிந்தது; எரிமலை வெடித்தது. பிரளயம் புரண்டது.
  "அண்ணுச்சி, ஐயனருமேலே ஆணையாச் சொல் லுறேன். நீங்க எதுவும் சந்தேகப் படாதீங்க. வடிவேலு எசமானுக்கு  வழியிலே  தேள்கொட்டி ரொம்ப தடபுடலாயிருக்கு. ஐயருை  சோதனைதான் இப்படி நேர்ந்திருக்குன்னு பேசிக்கிருங்க."
 கண்மணிக்கு எல்லாம் புதிர்போலத் தோன்றியது. இருந்தும் நடையைக் கட்டினுன் வடிவேலுவிடம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/39&oldid=1490143" இலிருந்து மீள்விக்கப்பட்டது