பக்கம்:இனிய கதை.pdf/43

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 தேடிவந்த தெய்வம்


  "அக்கா!" எஎன்று கூப்பிட்டுக்கொண்டு வந்தாள் கமலா. தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்

டிருந்த நான் மெல்ல ஏறிட்டுப் பார்த்தேன். என் கண்களிலிருந்த நீர்த்திரை மறையவில்லை.


 தொடர்ந்த இருமல் வந்து விட்டது, என் மெல்லிய உடலெல்லாம் தாளாத நோவு.


நான் கமலாவுக்குச் சொந்த அக்காளல்ல; ஆனுலும் நாங்கள் இருவரும் பழகிய முறை அப்படிப்பட்ட 'அக்காள்__தங்கை' பாந்தவ்யத்தை எங்களிடையே வித்திட்டிருந்தது. இப்போதைக்கும் க ம லா தா ன் எனக்கு உடன் பிறந்தாளாகவும், படுத்த படுக்கையாகக் கிடந்த கடந்த நாலு மாதமாக என்னுடன் கூடவே இருந்து பணிவிடை புரியும் உயிர்த் தோழியாகவும்-ஏன் பெற்றவளாகவும், உற்றவளாகவும்-ஆக எல்லாமாகவும் நிறைந்திருக்கிருள்!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/43&oldid=1490165" இலிருந்து மீள்விக்கப்பட்டது