பக்கம்:இனிய கதை.pdf/44

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

59

                 59
  இரவு மணி பன்னிரெண்டு. எனக்கு வேளைப் பிரகாரம் கொடுக்க வேண்டிய மருந்தைக் குலுக்கினள்; எனக்குக் குமட்டியது. அவுன்ஸ்கிளாஸில் விளக்கு வெளிச்சத்தில் கணக்கிட்டு அளவு மருந்தை ஊற்றி என்னிடம் நீட்டினுள், மருந்தைத் தரையில் கொட்டி விட்டு கிளாசை மேஜைமீது 'டங்'  கென்று ஆத்திரத் துடன் வைத்தேன். அவள் முகத்தில் என்மீதுகொண்ட கோபத்தின் விளைவு. அவளுக்கு எதற்குமே உரிமை யுண்டு. நான் என்ன செய்யட்டும்? என் நிலை...... இதற்கு விடிவு...... !
   "அக்கா, என்றுமில்லாமல் ஏன் இப்படி மருந்தைக் கொட்டிவிட்டாய்? மருந்துகுடித்து அது உடலில் சார்ந்தால்தானே உன் நோய் ஜல் தியில் குணமாகும்; உடம்பிலும் ரத்தம் ஊறும்...”
   "என் சீக்குக் குணப்படவா? ஏன்? யாருக்காக?... ஆமாம்; என் உடம்பு சீக்கிரமே தேற வேண்டுமென்று அல்லும் பகலும் அனவரதமும் கவலைப்பட்டு உருக் குலைந்த, நிலைகுலைந்த, சீர்குலைந்த காலமும் ஒன்று இருந்தது வாஸ்தவம்தான். அது அன்று! என்ருே ஓர் நாள் ஆல்ை இன்றல்ல. இனி என்றுமே இல்லை இனி என் தேகம் சுகமடைய வேண்டவே வேண்டாம். சுகப் பட்டு, என் கண்முன் என் வீட்டில் என்னைக் கைப் பிடித்தவர் இன்னுெருத்தியுடன் நடத்தப்போகும் காதல் நாடகத்தை இந்த ஜன்மத்தில் இந்தக் கண்களால் நான் பார்த்துக்கொண்டிருக்கவா?... ஊஹாம்; ஒருக் காலும் மாட்டேன். அதற்குள் என் உயிர் உடலைவிட்டுப் பிரிந்துவிடும். மங்களம் என்று எனக்கு எந்த வேளையில் பெயர் வைத்தார்களோ என் வாழ்வு அமங்களமாக முடியப் போகிறது!" என்று பித்துப் பிடித்தவளைப் போலக் கத்தினேன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/44&oldid=1490167" இலிருந்து மீள்விக்கப்பட்டது